அதிக எதிர்பார்ப்பு பெற்ற மஹிந்திரா & மஹிந்திராவின் எஸ்யுவி அறிமுகம்: தி தார் ராக்ஸ் !
ஆட்டோமோட்டிவ் மேனுஃபேக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் [AMPL] - ன்
அதிக எதிர்பார்ப்பு பெற்ற மஹிந்திரா & மஹிந்திராவின் எஸ்யுவி அறிமுகம்: தி தார் ராக்ஸ் !
சென்னை: 19 செப்டம்பர், 2024: இந்தியாவின் முன்னணி எஸ்யுவி தயாரிப்பாளரான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், இந்நாட்டில் எஸ்யுவி தளத்தை மறுவரையறை செய்கிற தார் ராக்ஸ் – ‘தி’ எஸ்யுவி – ஐ பெருமையுடன் அறிமுகம் செய்கிறது. ரூ.12.99 இலட்சம் என்ற விலையில் வெளிவரும் தார் ராக்ஸ், மஹிந்திராவின் துணிவான மனத்திடம் மற்றும் வழக்கத்திலிருந்து மாறுபட்ட புதுமை உணர்வை பிரதிபலிக்கிறது. பார்ப்பவர்களை திரும்பிப் பார்க்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ள தார் ராக்ஸ் அதிக பாதுகாப்பானது; அதே வேளையில், ஆற்றல் வாய்ந்த செயல்திறனை கொண்டது. பல்வேறு ஆடம்பர சொகுசு அம்சங்களைக் கொண்டிருக்கும் தார் ராக்ஸ், அனைத்து வகையான தரைப்பரப்புகளிலும் இயக்குவதற்கு மிகவும் சுலபமானது.
மஹிந்திராவின் முற்றிலும் புதிய M_GLYDE பிளாட்ஃபார்ம் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் தார் ராக்ஸ் – ஐ மிக எளிதாக கையாளலாம். இவ்வகயினத்தில் மிகச்சிறந்த டைனமிக்ஸ் அம்சங்களை கொண்டிருப்பதால், இதன் பயண அனுபவம் மிகவும் இனிதாக இருப்பது நிச்சயம். தார் – ன் வெளியார்ந்த DNA அம்சங்களை மேம்பட்ட நவீனத்துவத்துடன் நேர்த்தியாக கலந்து ப்ரீமியம் எஸ்யுவி அனுபவத்தை தார் ராக்ஸ் வழங்குகிறது, தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மிக நேர்த்தியானவற்றையே எதிர்பார்க்கின்ற மற்றும் அவற்றைப் பெறுவதில் உறுதியாக இருக்கின்ற நபர்களின் தேவைகளை இப்புதிய எஸ்யுவி சிறப்பாக பூர்த்தி செய்யும்.
பல்வேறு தரைப்பரப்புகள், உயரமான இடங்கள் மற்றும் மிக கடுமையான பருவநிலை நிலவும் சூழல்களில் கடுமையான பரிசோதனைகளுக்கு தார் ராக்ஸ் உட்படுத்தப்பட்டிருக்கிறது. தார் பாலைவனத்தின் சுட்டுப்பொசுக்கும் மணற்பரப்புகள், உம்லிங் லா – ன் மலைஉச்சி பிரதேசங்கள் மற்றும் கூர்க் – ன் சகதியான தரைப்பரப்புகள் மற்றும் காஸா – ல் -20°C – ன் உறையவைக்கும் குளிர்பிரதேசங்கள் ஆகியவற்றில் தார் ராக்ஸ் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. இதயத்தில் இந்தியராகவும் மற்றும் மனதளவில் உலகளாவிய மனப்பான்மையையும் கொண்டிருக்கும் குளோபல் இந்தியர்களின் வலுவான மற்றும் நம்பகமான விருப்பத்தேர்வாக தார் ராக்ஸ் திகழ்வதற்கு இந்த விரிவான பரிசோதனைகள் உத்தரவாதமளிக்கின்றன.
சென்னை வாடிக்கையாளர்களுக்காக 300+ வாடிக்கையாளர்கள் ஆர்வத்தோடு கூடியிருந்த மக்களின் முன்பாக செப்டம்பர் 19-ம் தேதியன்று, ஆட்டோமோட்டிவ் மேனுஃபேக்ச்சரஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை (AMPL) ஆல் தார் ராக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த அறிமுக விழாவைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ்களை இந்நிறுவனம் வழங்குகிறது மற்றும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் பட்டியலை தயாரித்திருக்கிறது. இந்த மிகச்சிறந்த எஸ்யுவிக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் அக்டோபர் 3-ம் தேதி முதல் ஆரம்பமாகும்.
கருத்துகள் இல்லை