சற்று முன்



ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ளாஷ் சேல்’ அறிமுகம் வெறும் 1599 ரூபாய் கட்டணம் முதல் விற்பனை !

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ளாஷ் சேல்’ அறிமுகம்! 

வெறும் 1599 ரூபாய் கட்டணம் முதல் விற்பனை !!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இந்த ஃபிளாஷ் சேல் சலுகை உள்நாட்டு விமான பயணங்களுக்கு மட்டும் நவம்பர் 13, 2024 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் [Air India Express] தனது அதிரடி சலுகையாக ’'ஃப்ளாஷ் சேல்' [Flash Sale] விற்பனையை அறிமுகப்படுத்தியிருக்கிறது, இந்த சிறப்பு விற்பனையில்,  முக்கியமான முன்பதிவு தளங்களில்  பல்வேறு விமான தடங்களில்  வெறும் 1599 ரூபாய் முதல் கட்டணங்கள் ஆரம்பமாகின்றன. இந்த சிறப்பு சலுகையானது, 19-ம் தேதி நவம்பர் 2024 முதல் 30 ஏப்ரல் 2025 வரை மேற்கொள்ளும் உள்நாட்டு விமான பயணங்களுக்காக நவம்பர் 13-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு மட்டும் பொருந்தும். 

மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விருது பெற்ற இணையதளமான airindiaexpress.com மற்றும் அதன் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 1444 ரூபாய் முதல் எக்ஸ்பிரஸ் லைட் கட்டணங்களில் பிரத்தியேக தள்ளுபடியுடன், பூஜ்ஜிய வசதிக் கட்டண [zero convenience fee] சலுகையையும் வழங்குகிறது. எக்ஸ்பிரஸ் லைட் கட்டணத்தில் எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல், கூடுதல் 3 கிலோ கேபின் பேக்கேஜை எடுத்து செல்வதற்கான முன்பதிவு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. மேலும் உள்நாட்டு விமானங்களில் செக்-இன் லக்கேஜ்ஜிற்கு தள்ளுபடி கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது. 15 கிலோ செக்-இன் லக்கேஜ்ஜிற்கு வெறும் 1000 ரூபாயும், சர்வதேச விமானங்களில் 20 கிலோ செக்-இன் லக்கேஜ்ஜிற்கு 1300 ரூபாயும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இந்த பிரத்தியேக சலுகைகளை அதன் லாயல்டி உறுப்பினர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இணையதளத்தில் பெறமுடியும். இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்பிரஸ் பிஸ் கட்டணத்தில் [Xpress Biz fare] 25% தள்ளுபடியை வழங்குகிறது.    எக்ஸ்பிரஸ் பிஸ் என்பது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கி வரும் பிசினஸ் கிளாஸ்ஸூக்கு இணையான ஒன்றாகும்.  விருந்தினர்கள் 58 அங்குலங்கள் வரையிலான இருக்கை வசதியுடன் மேம்பட்ட பயண அனுபவத்திற்காக தங்களது இருக்கைகளை Biz இருக்கைகளுக்கு மாற்றம் செய்து கொள்ளவும் முடியும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை துரிதமாக விரிவுபடுத்தி வருவதால், ஒவ்வொரு வாரமும் புதிய விமானத்தை தனது விமான சேவையில் இணைத்து வருகிறது. இதனால் எர் இந்தியா எக்ஸ்பிரஸின் புத்தம் புதிய 30 போயிங் 737-8 விமானங்களில் இந்த இருக்கைகளை மேம்படுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் எர் இந்தியா எக்ஸ்பிரஸ் லாயல்டி உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கைகள், சூடான கெளர்மேட் உணவுகள் மற்றும் எக்ஸ்பிரஸ் [Gourmair’ hot meals, seats Xpress] ஆகியவற்றில் 25% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த சலுகைகளுடன் கூடுதலாக, மாணவர்கள், மூத்த குடிமக்கள், சிறு,நடுத்தர தொழிற்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இணையதளத்தில் சிறப்பு தள்ளுபடி கட்டணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பற்றி..

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியாவின் ஒரு துணை நிறுவனமாகும். மேலும் இது டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது. 90 விமானங்களுடனான சேவையின் மூலம், 35 உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் 14 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் தினமும் 400 விமானங்களை இயக்கி வருகிறது. தனது விமான சேவை அணிவகுப்பில் 61 போயிங் 737 விமானங்கள் மற்றும் 29 ஏர்பஸ் A320 விமானங்கள் என மொத்தம் 90 விமானங்கள் இருக்கின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விருந்தினர்களை 'நீங்கள் நீங்களாகவே பறக்கலாம்' [Fly As You Are]  என்ற முன்மொழிவுடன் அழைக்கிறது. தனித்துவமான இந்திய அரவணைப்பு உணர்வுடன், இந்த விமான நிறுவனம் சூடான கெளமெர் [Gourmair] உணவுகள், செளகரியமான இருக்கைகள், மற்றும் பிரத்தியேக லாயல்டி பலன்களையும் வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விருது பெற்ற மொபைல் ஆப் மற்றும் இணையதளமான airindiaexpress.com.-ல் தனித்துவமான லாயல்டி பலன்களை வழங்குகிறது. 


கருத்துகள் இல்லை