2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள் !
2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள் !
வங்கியின் உலகளாவிய பிசினஸ், முந்தைய ஆண்டைவிட 8% உயர்ந்து ₹12.61 லட்சம் கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது
நிகர இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹2119 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹2852 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 35% வளர்ச்சி கண்டிருக்கிறது
செயல்பாட்டு இலாபம், டிசம்பர்’23-ல் பதிவான ₹4097 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹4749 கோடியாக 16% அதிகரித்திருக்கிறது
நிகர வட்டி வருவாய், டிசம்பர்’23-ல் பதிவான ₹5815 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹6415 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 10% அதிகரித்திருக்கிறது
கட்டணம் சார்ந்த வருவாய், டிசம்பர்’23-ல் பதிவான ₹852 கோடி என்பதிலிருந்து 9% வளர்ச்சி கண்டு டிசம்பர்’24-ல் ₹931 கோடியாக உயர்ந்திருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), டிசம்பர்’23-ல் இருந்த 1.11% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 28 bps உயர்ந்து 1.39% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), டிசம்பர்’23-ல் இருந்த 19.92% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 108 bps மேம்பட்டு 21.00% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
கடன்கள் மீதான வருவாய் (YoA), டிசம்பர்’23-ல் இருந்த 8.78% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 14 bps உயர்ந்து 8.92% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
முதலீடுகள் மீதான வருவாய் (YoI), டிசம்பர்’23-ல் இருந்த 6.80% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 32 bps உயர்ந்து 7.12% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
வருவாய்க்கான செலவு விகிதம் டிசம்பர்’23-ல் 46.90% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 234 bps குறைந்து 44.56% ஆக பதிவாகியிருக்கிறது
மொத்த கடன்கள், டிசம்பர்’23-ல் பதிவான ₹509800 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 10% வளர்ச்சி பெற்று ₹559199 கோடியாக அதிகரித்திருக்கிறது
RAM துறைக்கு (ரீடெய்ல், விவசாயம் மற்றும் MSME) வழங்கப்பட்ட கடன்கள் டிசம்பர்’23-ல் இருந்த ₹296845 கோடி என்ற அளவிலிருந்து டிசம்பர்’24-ல் ₹334739 கோடியாக உயர்ந்து 13% வளர்ச்சியை பதிவுசெய்திருக்கிறது
மொத்த உள்நாட்டு கடன்களுக்கு RAM-ன் பங்களிப்பு 64.35% ஆக இருக்கிறது. ரீடெய்ல், விவசாயம், MSME (RAM) ஆகிய பிரிவுகளுக்கான கடன்கள் முந்தைய ஆண்டைவிட முறையே 16%, 13.5% மற்றும் 8% என அதிகரித்திருக்கின்றன. முந்தைய ஆண்டைவிட வீட்டுக்கடன் (அடமானம் உட்பட) 12% அதிகரித்திருக்கிறது
முன்னுரிமை துறைக்கான கடன் வழங்கல் டிசம்பர்’24-ல் ஒழுங்குமுறை தேவைப்பாடான 40%-க்கு எதிராக ANBC-யின் ஒரு சதவீதமாக 43.85% (₹192761 கோடி) ஆக பதிவாகியிருக்கிறது
மொத்த டெபாசிட்கள் டிசம்பர்’23-ல் பதிவான ₹654154 கோடிக்கு மாறாக 7% வளர்ச்சி கண்டு டிசம்பர்’24-ல் ₹702282 கோடி என்ற அளவை எட்டியிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு, சேமிப்பு & CASA டெபாசிட்டுகள் முறையே 5%, 3.5% மற்றும் 4% என அதிகரித்திருக்கின்றன
உள்நாட்டு CASA விகிதம் 40% என 31 டிசம்பர் 24-ல் பதிவாகியிருக்கிறது
31 டிசம்பர் 24-ல் CD விகிதம் 79.63% ஆக இருக்கிறது
GNPA (மொத்த வாராக்கடன்கள்) டிசம்பர்’23-ல் இருந்த 4.47% லிருந்து முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 121 bps குறைந்து 3.26% ஆக பதிவாகியிருக்கிறது. NNPA (நிகர வாராக்கடன்கள்) டிசம்பர்’23-ல் இருந்த 0.53% லிருந்து டிசம்பர்’24-ல் 32 bps குறைந்து 0.21% ஆக பதிவாகியிருக்கிறது
வாரா ஐயக்கடன்களுக்கான (PCR) நிதி ஒதுக்கீட்டு விகிதம் (TWO - தொழில்நுட்ப கடன் தள்ளுபடி உட்பட, PCR), டிசம்பர்’23-ல் பதிவான 95.90% என்பதிலிருந்து 219 bps அதிகரித்து டிசம்பர்’24-ல் 98.09% ஆக பதிவாகியிருக்கிறது
நழுவல் விகிதம், டிசம்பர்’23-ல் 1.28% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 50 bps முன்னேற்றம் கண்டு 0.78% ஆக இருக்கிறது
மூலதன போதுமான நிலை விகிதம் 34 bps முன்னேற்றம் கண்டு 15.92% ஆக உயர்ந்திருக்கிறது மற்றும் CET-I, முந்தைய ஆண்டைவிட 91 bps உயர்ந்து 13.27% ஆக பதிவாகியிருக்கிறது மற்றும் அடுக்கு I மூலதனம் 89 bps வளர்ச்சி கண்டு 13.77% பதிவாகியிருக்கிறது
ஒரு பங்கிற்கான வருவாய் (EPS) டிசம்பர்’23-ல் பதிவான ₹67.12 என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 26% அதிகரித்து ₹84.70 ஆக பதிவாகியிருக்கிறது
நிகர இலாபம், செப்டம்பர்’24-ல் பதிவான ₹2707 கோடி என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் ₹2852 கோடியாக, முந்தைய காலாண்டைவிட 5% வளர்ச்சி கண்டிருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), செப்டம்பர்’24-ல் இருந்த 1.33% என்பதிலிருந்து 6 bps உயர்ந்து டிசம்பர்’24-ல் 1.39% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
கடன்கள் மீதான வருவாய் (YoA), செப்டம்பர்’24-ல் இருந்த 8.77% என்பதிலிருந்து டிசம்பர்’24-ல் 15 bps உயர்ந்து 8.92% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
உள்நாட்டளவில் நிகர வட்டி விளிம்பு (NIM), செப்டம்பர்’24-ல் பதிவான 3.49% லிருந்து 8 bps உயர்ந்து டிசம்பர்’24-ல் 3.57% ஆக பதிவாகியிருக்கிறது
GNPA (மொத்த வாராக்கடன்கள்) செப்டம்பர்’24-ல் 3.48% லிருந்து 22 bps குறைந்து டிசம்பர்’24-ல் 3.26% ஆக பதிவாகியிருக்கிறது, NNPA (நிகர வாராக்கடன்கள்) செப்டம்பர்’24-ல் பதிவான 0.27% லிருந்து டிசம்பர்’24-ல் 6 bps குறைந்து 0.21% ஆக பதிவாகியிருக்கிறது
நழுவல் விகிதம், செப்டம்பர்’24-ல் 1.06% லிருந்து டிசம்பர்’24-ல் 0.78% ஆக குறைந்திருக்கிறது.
கடன்கள் மீதான செலவு, செப்டம்பர்’24-ல் பதிவான 0.65% லிருந்து டிசம்பர்’24-ல் 18 bps குறைந்து 0.47% ஆக பதிவாகியிருக்கிறது.
நிகர இலாபம், நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹5816 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் ₹7962 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 37% வளர்ச்சி கண்டிருக்கிறது
செயல்பாட்டு இலாபம், நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹12535 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் ₹13980 கோடியாக 11.5% அதிகரித்திருக்கிறது
நிகர வட்டி வருவாய், நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் பதிவான ₹17258 கோடி என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் ₹18787 கோடியாக, முந்தைய ஆண்டைவிட 9% அதிகரித்திருக்கிறது
உள்நாட்டளவில் நிகர வட்டி விளிம்பு (NIM), நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 3.53% ஆக இருக்கிறது
சொத்துக்கள் மீதான இலாபமீட்டல் நிலை (RoA), நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் இருந்த 1.04% என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 27 bps உயர்ந்து 1.31% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
பங்குகள் மீதான இலாபமீட்டல் நிலை (RoE), நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் இருந்த 19.25% என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 137 bps மேம்பட்டு 20.62% ஆக வளர்ச்சி கண்டிருக்கிறது
வருவாய்க்கான செலவு விகிதம் நிதியாண்டு’24-ன் 9 மாத காலஅளவில் இருந்த 45.17% என்பதிலிருந்து நிதியாண்டு’25-ன் 9 மாத காலஅளவில் 50 bps குறைந்து 44.67% ஆக பதிவாகியிருக்கிறது
வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள்:
இவ்வங்கி, 3 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் (DBUs) உட்பட உள்நாட்டில் 5877 கிளைகளைக் கொண்டிருக்கிறது; இக்கிளைகளுள் 1987 கிராமப்புறங்களிலும், 1543 சிறு நகரங்களிலும், 1179 நகர்ப்புறங்களிலும் மற்றும் 1168 பெருநகரங்களிலும் செயல்படுகின்றன. இவ்வங்கிக்கு 3 வெளிநாட்டு கிளைகளும் மற்றும் ஒரு IBU-யும் (கிஃப்ட் சிட்டி கிளை) இருக்கின்றன.
இவ்வங்கி, 5224 ஏடிஎம்கள் மற்றும் பிஎன்ஏ-களையும் மற்றும் 13292 பிசினஸ் முகவர்களையும் (BCs) கொண்டு செயலாற்றுகிறது.
கருத்துகள் இல்லை