ரிங் ரிங் திரை விமர்சனம் !
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான விவேக் பிரசன்னா நடிப்பில் ரிங் ரிங் !
மற்றும் நடிகை சாக்ஷி அகர்வால், டேனியல் , அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை ஆரம்பமே நாலு நண்பர்கள் சந்திப்பது தான் நண்பரின் பிறந்தநாள் அன்று பாண்டிச்சேரியில் இருக்கும் ஒரு நண்பர் வீட்டிற்கு அனைவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க வருகின்றனர். அங்கு நடக்கும் சுவாரசியமே இப்படத்தின் கதை.
ரிங் ரிங் என்பது ஒரு நெருக்கமான சூழலில் நடக்கும், எமோஷன் மற்றும் திரில்லர் கலந்த ஒரு திரைப்படமாக இருக்கிறது.
சமீப காலங்களில், செல்போன்களின் தனிப்பட்ட தன்மை மற்றும் அதனால் உருவாகும் பிரச்சனைகளை ஆராயும் பல கதைகள் வந்துள்ளன. இந்த படமும் அதே கோணத்தில், நண்பர்களுக்குள் நடக்கும் உறவுகளை சோதனைக்குட்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.
ஆனால் இத்திரைப்படம் மிக எமோஷனலாக உணர்வுபூர்வமாக ஒவ்வொருவருடைய நடிப்பும் அமைந்துள்ளது.
ஒரே இடத்தில் வைத்து அனைவரையும் உட்கார வைத்து விட்டனர்.
ரிங் ரிங் அனைவருக்கும் ஒரு பதட்டமாகவே இருக்கும் இது போன்ற விஷயங்கள் வாழ்க்கையில் நடைபெற்றால்.
ஆக மொத்தத்தில் ரிங் ரிங் அனைவரும் பார்க்கக் கூடிய திரைப்படம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை