தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மராத்தான் போட்டி !
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு.!
கோவை மாநகர மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக,
பெண் உரிமைகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி மகளிருக்கான *அக்னி சிறகே 2025* (Run For My Rights) மராத்தான் போட்டி சரவணப்பட்டியில் நடத்தப்பட்டு அதில் வெற்றிப் பெற்ற முதல் 5 பெண்களுக்கு 1 இலட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.!
இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்டக் கழகச் செயலாளர் திரு.V.சம்பத்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் கோவை புறநகர் வடக்கு திரு.V.ராஜ்குமார், கோவை கிழக்கு திரு.S.யுவராஜ், கோவை தெற்கு திரு.K.விக்னேஷ், கோவை புறநகர் கிழக்கு திரு.S.பாபு மற்றும் மகளிரணி நிர்வாகிகள், தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை