சற்று முன்



ஹிட் 3 திரை விமர்சனம் !



தமிழ் சினிமா உலகில் பிறமொழி படங்கள் வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் நடிகர் நானி நடிப்பில் ஹிட் 3 . மற்றும் நடிகை ஸ்ரீநிதி செட்டி , பிரதீக் பாபர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அர்ஜுன் சர்க்கார் வந்தார்… காவல் சேவையா? அல்லது கொலைக்குழுவா ?

கதை ஆரம்பமே : 

சிறைச்சாலை காட்சியில் கதை துவங்குகிறது. நானி ஒரு பிளாஷ்பேக் வழியாக கதையை சுருக்கிக் கூறுகிறார். அதிர்ச்சி கொலைகள் தொடர்வதை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி அர்ஜுன் சர்க்கார். விசாரணையின் போதே கொலைக்குழுவின் உறுப்பினராகவே அடைமொழி பெற்று கலக்குகிறார் நானி – அதுவே முதல் ட்விஸ்ட். 

கதை விரிவாகும் போதெல்லாம் ரத்தம், மிரட்டல், டார்க் ஆட்சன்கள்!

இடைவெளிக்குள் காதல், பின்னர் முழுமையான ஆக்ஷனுக்குள் நுழையும் நாயகி ஸ்ரீநிதி, ஸ்டைலிஷ் ஆனதொரு மாறுபாடாக இருக்கிறார். வில்லனாக பிரதீக் பாபர் ஒரு சைக்கோவாக அச்சுறுத்துகிறார். நானியின் மாஸ் மற்றும் ஸ்டைல் – ரசிகர்களுக்கு விருந்து.

டெக்னிக்கல் டீம்:

மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை, ஸ்ரீனிவாஸின் ஒளிப்பதிவு – வெறும் தொழில் நுட்பம் அல்ல, உணர்வு கொடுக்கும் கருவிகள் போல!

படத்தில் சில காட்சிகள்:

  • நானி ஸ்டைலாகக் கையிலே சிகரெட் வைத்துக்கொண்டு நடந்து வரும் காட்சி – ஹீரோ மார்ஃபிங்
  • நாயகனின் 'மேரேஜ் ஏஜ்' வசனம் – கலகலப்பான சிரிப்பு
  • கிளைமாக்ஸில் ஒரே இடத்தில் ரத்தக் களத்தில் நடக்கும் மோதல் – டென்ஷனின் உச்சம்

முடிவுரை:

சைக்கோ திரில்லர் படங்களில் புதிய பரிமாணமாக நானியின் ஹிட் 3! சில லாஜிக் பிழைகள் இருந்தாலும், அதன் ஸ்டைல், டென்ஷன், ட்விஸ்ட் – அனைத்தும் ரசிகர்களுக்கு திருப்தி தரும்.

திரில்லர் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய விருந்து. 

Rating : 3 / 5 


கருத்துகள் இல்லை