சற்று முன்



வேம்பு திரை விமர்சனம் !



தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிகருஷ்ணா நடிப்பில் வேம்பு மற்றும் நடிகை ஷீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஜஸ்டின் பிரபு.


கதையின் ஆரம்பமே

நாயகி ஷீலா, சிறிய வயதிலேயே சிலம்பத்தில் ஆர்வம் கொண்டவள். தந்தையின் ஊக்கத்துடன் மாநில அளவிலான போட்டிகள் நோக்கி பயணிக்க முயல்கிறாள். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக உறவினர் பையனுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறது, அது சிலம்பத்தில் தடையாகிறது.

ஆனால் கணவர் ஹரிகிருஷ்ணன், "நீ போட்டியில் பங்கேற்கும் வரை நமக்குள் தாம்பத்தியம் வேண்டாம்" என்று உறுதியாக கூறி ஆதரவளிக்கிறார். ஆனால் எதிர்பாராத மின்னல் தாக்கத்தில் ஹரிக்கு பார்வை இழக்கிறது. அதன் பின் குடும்ப பசியை சுமக்கும் பொறுப்பு ஷீலாவின் தோள்களில் வருகிறது.

ஷீலா, தனது கணவனுக்காகவும், சிறிய கனவுகளை நிறைவேற்றவும் போராடுகிறாள். சிலம்ப போட்டிகளில் பங்கேற்றாரா? கணவனுக்கு துணையாக இருந்தாரா? என்பதே மீதிக்கதை.

நடிப்பு:

ஷீலா – கதையின் உயிர். தற்காப்பு கலை பெண்ணின் ஆளுமையை உணர்த்துகிறார்.

ஹரிகிருஷ்ணன் – பார்வை இழந்த பின் மெல்லிய உணர்வுகள் வெளிப்படுத்தல் சிறப்பு.

ஷீலாவின் தந்தை மாரிமுத்து – மிகச் சிறந்த பாத்திரம்.

தொழில்நுட்பம்:

ஒளிப்பதிவாளர் குமரன் – கிராமத்து அழகை அழகாக பதிவு செய்துள்ளார்.

இசை – மணிகண்டன் முரளி இசை மூலம் உயிர் ஊட்டுகிறார்.

இயக்கம் – ஜஸ்டின் பிரபு, சமூக விழிப்புணர்வுடன் தற்காப்பு கலையின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

வேம்பு  திரைப்படம் தற்காப்பு கலையின் துயரம் மற்றும் வீரம்.

Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை