சற்று முன்



காவேரி மருத்துவமனையில் (வடபழனி) நுரையீரல் உயர் இரத்தஅழுத்த சிகிச்சை மையம் திறப்பு !


 காவேரி மருத்துவமனையில் (வடபழனி) நுரையீரல் உயர் இரத்தஅழுத்த சிகிச்சை மையம் திறப்பு ! 

இத்துறையில் நாட்டின் முதல் ‘ஒருங்கிணைந்த’ சிகிச்சை மருத்துவமனை இது!

சென்னை, மே 29, 2025 –  சென்னை வடபழனியில் உள்ள  காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்சனைகளுக்கான அதிநவீன, சிறப்பு சிகிச்சையளிப்பதில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. இம்மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையத்தைத்  தனது இதயவியல் துறையின்கீழ் திறந்திருக்கிறது. அனைத்து வயதிலும் உள்ள நுரையீரல் சார் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கான முழுமையான மருத்துவ, அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை தொடர்பான சோதனை, நிர்வாகம் மற்றும் அவர்களின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருதல் என்று அனைத்தையும் இம்மையம் கவனித்துக்கொள்ளும். இதுபோன்ற ஒரு தனித்துவமான மையம் அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். 

இப்புதிய மையம், நாட்டின் முன்னணி பிரத்தியேக நுரையீரல் உயர் இரத்த அழுத்த மையங்களுள் ஒன்றாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும், சிக்கலான நுரையீரல் உயர் இரத்தஅழுத்த நோயாளிகளுக்கு மரபியல் சார்ந்த சோதனைகளை மேற்கொண்டு சிகிச்சையளிக்கும் உயர் வசதிகள் இங்கு இருப்பதே நாட்டிலுள்ள பிற மருத்துவமனைகளிலிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.  வழக்கமாக குழந்தைகள் மற்றும் அதிக இடர்ஆபத்தில் உள்ள பெரியவர்கள் விஷயத்திலும் கூட போதுமான அளவுக்கு பரிசோதனை செய்தல், சிகிச்சையளித்தல் நிகழ்வதில்லை என்பதுதான் நடைமுறை யதார்த்தமாகும். 

காவேரி மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைத்துறையின் தலைவரும் முதுநிலை மருத்துவ ஆலோசகருமான மருத்துவர் அன்பரசு மோகன்ராஜ் இது குறித்துப் பேசும்போது, “இப்புதிய மருத்துவ மையம், நுரையீரல் தொடர்பான சிக்கலான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும். எடுத்துக்காட்டாக, முற்றிய இரத்தக் கட்டியால் ஏற்படும் நுரையீரல் அழுத்த நோய் (CTEPH) ஆகிய அபூர்வ பிரச்சனைகளை குறிப்பிடலாம். தொடர்ச்சியாக இரத்தக் கட்டிகள் ஏற்படும்போது நுரையீரலுக்குச் செல்லும் தமனிகளை அவை அழுத்தும். இதனால் நுரையீரல் மீதான அழுத்தம் அதிகரித்து, இதயத்துக்குப் பணிச்சுமையை அதிகப்படுத்திவிடும். இப்பிரச்சனைகளை இதுபோன்ற சிறப்பு மருத்துவமனைகளில்தான் குணப்படுத்த இயலும்” என்றார். 

இவ்வகை நோயாளிகளுக்கு பல்மனரி த்ரோம்போ எண்டார்டெக்செமி (PTE) என்னும் சிக்கலான, அதிநவீன அறுவை சிகிச்சை எனும் தீர்வு தற்போது கிடைத்திருக்கிறது. இது ‘திறந்த இதய  அறுவை சிகிச்சையாகும். இதன் சிக்கலான தன்மை, இதனைக்கையாளத் தேவையான உயர்திறன் ஆகியவற்றின்  காரணமாக உலகமெங்கும் மிகச்சில மருத்துவமனைகளே இவ்வசதியைக் கொண்டிருக்கின்றன. அண்மையில் வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் 10 நாட்களில் 26 முதல் 72 வயது வரையிலான மூன்று நோயாளிகள் இச்சிகிச்சை பெற்றுள்ளனர்.  அவர்களுள் மத்திய அரசு ஊழியர் ஒருவரும் சர்வதேச அளவிலான அலுவலர் ஒருவரும் உள்ளடங்குவர். நோயாளியின் உடல்நிலை 18 டிகிரி செல்சியஸ்க்கு கொண்டு வரப்படும்.   அவ்வாறு செய்யப்பட்டு நோயாளியின் இரத்த ஓட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதனால் நுரையீரல் தமனியில் உள்ள கட்டிகள் பாதுகாப்பாக அகற்றப்படும். 

நன்கு கட்டமைக்கப்பட்ட-அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட-நோயாளிக்கு தனிப்பட்ட  கவனம் செலுத்தும் சிகிச்சை எல்லா நோயாளிகளுக்கும் கிடைப்பதில்லை. இந்த வெற்றிடத்தை இப்போதைய இந்த புதிய மருத்துவமனையின் வாயிலாக  வடபழனி காவேரி  மருத்துவமனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நோயாளிகள் எந்த வயதினராகவும், எத்தகைய  மருத்துவ நிலையில் இருந்தாலும், அவர்களின் நோய் நிலைகளுக்கேற்ற அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் ஊடுருவல் சிகிச்சை (எடுத்துக்காட்டாக இதயத்தின் வலது புறத்தில் நுண்ணிய குழாயைச் செலுத்தி சிகிச்சையளிப்பது),  சி.டி., எம்.ஆர்.ஐ, ஸ்கேன், நுரையீரல் ரத்தப் பரிமாற்றம் தொடர்பான ஸ்கேனிங், இந்நோய் மரபியல் கோளாறுகளால் வந்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதிலுள்ள இடர்களைக் கண்டறிவது, தொடக்க நிலையிலேயே பிரச்சனையை அடையாளம் காண்பது என்று அனைத்து கோணங்களிலும் அவர்கள் நன்கு கவனிக்கப்படுகின்றனர். 

நுரையீரல் தொடர்பான நோய்களுக்கான இந்த புதிய மையமானது வாத நோய், மரபு நோய், மகப்பேறு , மகளிர்  மற்றும் குழந்தை மருத்துவம் என்று பல்வேறு துறைகளின் தகவல்களைக் கூட்டாக ஒருங்கிணைத்து, ஒரு முழுமையான சிகிச்சையை ஒரு கூரையின்கீழ் இம்மருத்துவமனை வழங்குகிறது. 

காவேரி மருத்துவமனையின் இதய செயல்பாட்டு முடக்கம் & மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் தலைவரும் முதுநிலை இதய ஊடுருவல் அறுவை சிகிச்சை வல்லுநருமான பேராசிரியர் டாக்டர் பி.மனோகர் பேசும்போது, “பல துறைகளையும் ஒருங்கிணைப்பதே இம்மருத்துவமனையின் பலம் எனக் கூறலாம். நுரையீரல் உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனை, பல்வேறு உறுப்புகளின் அமைப்பு முறைகளையும் பாதிக்கும் தன்மை உடையது. எனவேதான் எமது மருத்துவமனையின் மருத்துவர் குழு, நோயாளியின் உடல்நிலையின் ஒவ்வொரு கோணத்தையும் ஆராய்கிறது. வெவ்வேறு சிறப்புத்துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுவதால், பரிசோதனை முறைகளில் துல்லியத்தன்மையையும் நீடித்த பயனளிக்கும் தீர்வுகளையும் மேம்படுத்த முடிகிறது” என்றார்.

புதிய மருத்துவ மையத் தொடக்க விழா நிகழ்ச்சியில் முதுநிலை மருத்துவர்கள், மருத்துவமனையின் தலைமை அலுவலர்கள், மருத்துவத்துறை விருந்தினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு பற்றி பேசிய காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனரும் செயலாக்க இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ், “காவேரி மருத்துவமனையின் அடிப்படைத் தத்துவமே, உயர்தரமான மருத்துவத்தை சிறப்பு கவனத்துடனும் வாஞ்சையுடனும்  வழங்குவதுதான். தற்போது திறக்கப்பட்டுள்ள நுரையீரல் உயர் இரத்த அழுத்த மருத்துவமனை அதைத்தான் பிரதிபலிக்கிறது.  நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் போன்ற தீவிரமான, அதிகம் கவனிக்கப்படாத நோய்களுக்கு கவனமாக மருத்துவ சேவையை வழங்குகிறோம் என்பதில் எங்களுக்குப் பெருமை” என்றார். 

இப்புதிய மருத்துவ மையம், வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது. மருத்துவ ஆலோசனைகள், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கான சேவைகள் இங்கு வழங்கப்படும். தொலைநோக்குப் பார்வை கொண்ட அணுகுமுறையும் மருத்துவமனையின் வலுவான தலைமையும் நுரையீரல் உயர் இரத்தஅழுத்த மேலாண்மைத் துறையில் நாட்டின் மிகச்சிறந்த மையமாக இதனை ஆக்கும் என்பதே இம்மருத்துவமனையின் நோக்கமாகும்.



கருத்துகள் இல்லை