சற்று முன்



Mission : impossible ! The Final Reckoning திரை விமர்சனம் !



மிஷன் இம்பாசிபிள்: தி பைனல் ரெக்கனிங் – ஈதன் ஹண்ட்-ன் கடைசி பாய்ச்சி!

பல வருடங்களாக 'மிஷன் இம்பாசிபிள்' தொடரின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொண்ட டாம் க்ரூஸ், இப்போது அந்த பயணத்தின் முடிவுக்கு வருகிறார். 'தி பைனல் ரெக்கனிங்' எனும் கடைசி பகுதியாக, இது வெறும் ஒரு திரைப்படமல்ல – ஒரு அனுபவம்.


கதையின் மையம் :

இந்த பாகம், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்ட அதில் இரண்டாவது மற்றும் இறுதி பாகம். கடந்த பாகத்தில் அறிமுகமான NTTA எனும் செயற்கை நுண்ணறிவு, இங்கு மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுக்கிறது. மனிதர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, உலக நாடுகளை அனு ஆயுத போர்களுக்கு தள்ளும் முயற்சி, அந்த AI-யின் திட்டம். அதில் இருந்து உலகைக் காப்பாற்றும் பணி – ஈதன் ஹண்ட் மற்றும் அவரது குழுவின் மீதான கடமை.

ஓர் அழிந்த நீர்மூழ்கிக் கப்பலில் மறைந்திருக்கும் டிவைஸை மீட்டு, அதை மற்றொரு தொழில்நுட்ப சாதனத்துடன் இணைத்து, 5D டிரைவ் மூலம் NTTA-வை கட்டுப்படுத்த வேண்டும். இது சாத்தியமற்றதாக தோன்றும், ஆனால் "நடக்காததை நடக்க வைக்கும்" என்பதே ஹண்ட்-ன் அடையாளம்!

படத்தின் சிறப்பம்சங்கள் :

டாம் க்ரூஸ்-ன் ஈதன் ஹண்ட்... இந்த கதாபாத்திரம் இப்போது நம்முடன் வாழும் மனிதனாகவே உணரப்படுகிறது. நீர், நிலம், ஆகாயம் என அனைத்து பரிமாணங்களிலும் அவர் கொடுக்கும் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களை அசரவைக்கும்.

தொடரின் முந்தைய பாகங்களை நினைவுபடுத்தும் கனெக்ஷன்கள், Tech Guy-ன் ரீஎன்ட்ரி, ஒரு சாதாரண பிக் பாக்கெட்டாக அறிமுகமாகும் பெண் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் – இவை அனைத்தும் ஒவ்வொரு தருணத்தையும் அருமையாக கட்டியமைக்கின்றன.

ஸ்டண்ட் காட்சிகள்? பாகத்தின் ஆரம்பத்தில் சிறிது மெதுவாக போவதுபோல் தெரிந்தாலும், ஈதன் கடலில் மூழ்கும் காட்சி, ஹெலிகாப்டர் சிக்வென்ஸ் போன்றவை literally breath-taking. ஹெலிகாப்டர் ஸ்டண்ட் நிகழும் போதே உங்கள் முகத்தில் காற்று வீசும் உணர்வு வரும் – அதேளவுக்கு life-like.

டெக்னிக்கல் டீம் – சல்யூட்!

திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை – அனைத்தும் மிகுந்த நவீனத்தன்மையுடன். AI எனும் வில்லனை ஒரு கருப்பு-வெள்ளை மனிதனாக காட்டாமல், நேர்மையான முறையில் அதன் ஆபத்தை விவரிக்கின்றது – இந்த காலத்தின் பிரச்சனைகளுடன் ஒத்துப்போகும் வகையில்.

இறுதி உணர்வு :

"இனி மிஷன் இம்பாசிபிள் இல்லை..." என்ற எண்ணம் மனதில் ஒரு வெறுமையை விட்டுச் செல்கிறது. ஈதன் ஹண்ட்-ன் கடைசி பயணம் முடிவடைகிறது, ஆனால் அந்த சுவாரசியம், அதிரடி, ஸ்டைல் – இது ரசிகர்களின் நினைவில் நீடிக்கப்போகிறது.

Rating  : 4 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை