சற்று முன்



வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் மிக பிரமாண்ட யோகா நிகழ்ச்சி !

 


ஜூன் 21 ம் தேதி சனிக்கிழமை சர்வதேச யோகா தினம் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெறுகிறது !

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில்

10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் மிக 

பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

மதுரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில், 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வருகிற சனிக்கிழமை (ஜூன் 21) மதுரை வேலம்மாள் ஐபி குளோபல் பள்ளியில் உசைன்

போல்ட் மைதானத்தில்

பிரமாண்ட யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் உசைன் போல்ட் மைதானத்தில் காலை 8 மணிக்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தலைமை தாங்கி

மாணவர்களுடன்

சேர்ந்து

நேரலையாக

யோகா நிகழ்ச்சியில்

பங்கேர்க்கிறார் பின்னர், அவர் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வும் பாராட்டு விழாவும் நடக்கவுள்ளது.


யோகா நேரலை நிகழ்ச்சிக்கு

வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சேர்மன் எம்.வி முத்துராமலிங்கம் தலைமை வகிக்கிறார்

மேலும்

பிரமாண்ட யோகா நிகழ்வில் வேலம்மாள் கல்வி

குழுமத்தின் கீழ் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கிறார்கள். மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே உடல் தகுதி, மனநல வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை முன்னிறுத்தியும், யோகா குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்தோடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய கல்விமுறை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையிலான பள்ளி குழுவினர் நிகழ்ச்சிக்கான

ஏற்பாடுகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை