சற்று முன்



குபேரா திரை விமர்சனம் ! Review


தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் அவரது நடிப்பில் குபேரா. 

மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா , நாகர்ஜுனா ,ஜிம் சர்ப் , ஜெய் பரகாஷ், பாக்யராஜ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சேகர் கம்முலா.

கதை மையம்:

ஒரு சாதாரண பிச்சைக்காரனாக இருக்கும் தேவா (தனுஷ் ) ,எவ்வாறு ஒரு கோடி கணக்கில் பணம் சுழற்றும் கும்பலால் பயன்படுத்தப்படுகிறார், பின்னர் அவரிடமிருந்து  எப்படி தப்பித்துக் கொள்கிறார் என்பது கதை. ?

நாயகன் தேவா:

வஞ்சிக்கப்பட்ட, ஆனால் உண்மையில் அப்பாவியான மனிதர். தனுஷ் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

வில்லன் கரடோகம்:

கார்பரேட்-அரசியல் கூட்டாண்மை, லஞ்சம், அதிகாரம், சிபிஐ என பரபரப்பான பின்னணி. அவருக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

ராஷ்மிகா கதாபாத்திரம் நன்றாக உள்ளது. டிஎஸ்பி ராஷ்மிகா கூட்டணி என்றாலே  ஒரு குத்து பாட்டு  இருக்கும் அது இந்த  படத்தில் இல்லை அது ஒன்றுதான் ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம். 

இயக்குநர் சேகர் கம்முலா:

சமூகத்தில் காணப்படும் பணம் சார்ந்த அரசியல், அதிகார பாவனை போன்ற உண்மைகளைத் தழுவி, ஒரு விறுவிறுப்பான கதையை சித்தரிக்க முயற்சி.

நடிப்பும் தொழில்நுட்பமும்:

தனுஷ், ராஷ்மிகா, நாகர்ஜூனா, ஜிம் சர்ப் பாக்யராஜ் அனைவரும் தங்களது கதாபாத்திரத்தில் நன்கு பட்டிருக்கிறார்கள். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பாராட்டத்தக்கது.

குறைகள்:

படம் 3 மணி நேரம் நீளமானது.

திரைக்கதை இடையே தொய்வடைகிறது.

முக்கிய உணர்வுகளை வலியுறுத்தும் முயற்சி சில இடங்களில் பஞ்சம்.

ஒட்டுமொத்தமாக:

"குபேரா" என்பது பணம், அதிகாரம், உண்மை, நம்பிக்கை போன்றவற்றின் மீது அமைந்துள்ள ஒரு உணர்வுப்பூர்வமான, ஆனால் விறுவிறுப்பும் மாறுபட்டும் செல்லும் திரைப்படமாக இருக்கிறது.

ஒரு வித்தியாசமான மாஸ் கதையை உண்மையுடன் சொல்லும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது.

Rating : 3.5 / 5 

Marveltamilnews.com


கருத்துகள் இல்லை