மெட்ராஸ் மேட்னி திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் மற்றும் நடிகர் காளி வெங்கட் நடிப்பில் மெட்ராஸ் மேட்னி மற்றும் ரோஷினி ஹரிப்பிரியன் , ஷெல்லி கிஷோர் , அர்ச்சனா, சுனில் சுகதா, சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திகேயன் மணி .
கதை ஆரம்பமே :
ஒரு கதையாசிரியர் — நடுத்தர குடும்ப வாழ்க்கையில் சாகசங்கள் எதுவும் இருக்காது என எண்ணியவர். ஆனால், அந்த வாழ்க்கையைப் பற்றி எழுத முடிவு செய்ததும், அவர் சந்தித்த நிஜங்கள் அவரின் பார்வையை மாற்ற ஆரம்பிக்கின்றன. எளிமையான வாழ்க்கையின் பின்னணியில் பதுங்கியிருக்கும் போராட்டங்களும், தவிப்புகளும், வெற்றியின்பங்களும் ‘மெட்ராஸ் மேட்னி’யின் மையக் கருத்தாகவே மிளிருகின்றன.
காளி வெங்கட் – எளிமையின் அடையாளம்
கதையின் நாயகனாக நடித்திருக்கும் காளி வெங்கட், கண்ணன் என்ற நடுத்தர குடும்ப தந்தையாக, தனது இயல்பான நடிப்பில் அசத்துகிறார். மக்களை மிகவும் நெருக்கமாகத் தொடும் இந்த கதாபாத்திரம், அவரின் நடிப்பில் உயிர் பெறுகிறது.
சத்யராஜின் கம்பீரம் :
கதையாசிரியர் ஜோதி ராமையாவாக நடித்திருக்கும் சத்யராஜ், குறைந்தவேளை திரையில் தோன்றினாலும், அவரது திரை இருப்பு படத்திற்கு ஆழத்தை தருகிறது. ஒரு ப்ரவுண்ட் ஆவியாக கதையின் மேடையை நகர்த்தும் விதத்தில் அவர் காட்சிகள் அமைந்துள்ளன.
மற்ற கதாபாத்திரங்கள் :
காளி வெங்கட்டின் மகளாக ரோஷினி ஹரிப்பிரியன், தந்தையை விட்டுக் கொடுக்காத மகளாக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.
மனைவியாக ஷெல்லி கிஷோர், அமைதியான ஆதரவாளியாக கதைக்கு உறுதுணையாக இருக்கிறார்.
எப்போதும் நிதானமான அம்மா கதாபாத்திரங்களில் நடித்த வந்த கீதா கைலாசம், இங்கு கலகலப்பான, நகைச்சுவை கலந்த பாத்திரத்தில் வேறுபட்ட பரிமாணம் காட்டியிருக்கிறார்.
துணை கதாப்பாத்திரங்களாக கிஷோர், அர்ச்சனா, சுனில் சுகதா, சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா என அனைவரும் நிஜ வாழ்க்கை மனிதர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.
தொழில்நுட்ப அணியினின் பங்கு :
ஒளிப்பதிவாளர் ஆனந்த்.ஜி.கே., மாடுகள், தெருக்கள், வீட்டிற்குள் காட்சிகள் என எளிமையான வாழ்விடங்களைக் கண்ணுக்கு எளிதாகவும் உணர்வுகளோடு நிறைந்தவையாகவும் வடிவமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.சி. பாலசாரங்கன், மெதுவான பின்னணி இசையின் மூலம், கதை சொல்லும் ஓரங்கத்திற்கு இசையையும் இணைத்திருக்கிறார்.
படத்தொகுப்பில் சில இடங்களில் குறைவுகள் இருந்தாலும், இயக்குனரின் கதை சொல்லும் தனித்தன்மை அதை மீட்டெடுக்கிறது.
முடிவுரை :
இயக்குநர் கார்த்திகேயன் மணி, நடுத்தர மக்கள் வாழ்க்கையின் எதார்த்தத்தையும், அந்த வாழ்க்கையின் ‘சாதாரணத்துக்குள் பதுங்கியிருக்கும் சாகசத்தையும்’ அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். திரைக்கதையின் மெதுவான ஓட்டம் சிலருக்கு சோதனையாக இருக்கக்கூடும், ஆனால் உண்மை மனிதர்களின் உணர்வுகளை உண்மையாய் பதிவு செய்திருப்பதே ‘மெட்ராஸ் மேட்னி’யின் உண்மையான வெற்றி.
Rating : 3.5 / 5
கருத்துகள் இல்லை