பறந்து போ' திரை விமர்சனம் ! சிரிப்பும் பாசமும் கொண்ட அப்பா-மகன் பயணம் ! Review
தமிழ் சினிமா உலகில் அகில இந்திய சூப்பர் ஸ்டார் ஆன மிர்ச்சி சிவா நடிப்பில் பறந்து போ . மற்றும் நடிகை அஞ்சலி , கிரேஸ் ஆண்டனி , அஜு வர்கீஸ் , மித்துல் ரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராம் .
'பறந்து போ' - சிரிப்பும் பாசமும் கொண்ட அப்பா-மகன் பயணம் !
இயக்குநர் ராம் தனது வழக்கமான கம்பீரமான கதைகளிலிருந்து விலகி, குடும்பம், உறவு, நகைச்சுவை கலந்த இனிமையான பயண கதையை எளிமையாக படைத்துள்ளார்.
மிர்ச்சி சிவா தனது இயல்பான நகைச்சுவை நேர்த்தியுடன் அப்பாகாக மின்ன, குழந்தை நட்சத்திரம் மித்துல் ரியான் குறும்புத்தனத்தால் ரசிக்க வைக்கிறார்.
கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ் என துணை நடிப்பும் ரசிகர்களை ஈர்க்கிறது.
என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, சந்தோஷ் தயாநிதி இசை, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை ஆகியவை படம் முழுக்க ஒரு இனிமையான உணர்வை ஏற்படுத்துகின்றன.
குடும்பத்தோடு சிரித்துப் பார்க்க ஏற்ற மனம் குளிரும் திரைப்படம் இது.
முடிவு : சிரிப்பும், பாசமும், வாழ்க்கையின் சிறிய ஆசைகளும் சேர்த்த ஒரு இனிமையான பயணம்.
Rating : 3 / 5
கருத்துகள் இல்லை