ஃப்ரீடம் திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் ஃப்ரீடம். மற்றும் நடிகை லிஜோ மோல் ஜோஸ் ,சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ் , சரவணன் , போஸ் வெங்கட் , ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சத்திய சிவா .
உண்மைக் கதையை உணர்வோடு, உண்மையாக கொண்டு வர முயற்சி
கதையின் மையம்:
1991-ல் இலங்கையில் இருந்து தப்பியொடி வந்த அகதிகள் ராமேஸ்வரம் முகாமில் தங்குகின்றனர்.
பாரத பிரதமரின் கொலைக்குப் பின்னர், அகதிகள் மீது முறையற்ற சந்தேகங்கள்.
வேலூர் கோட்டையில் சித்திரவதை.
நான்கு வருடங்கள் குடும்பம் பிரிந்து வாழும் துயர அனுபவம்.இப்படி நகர்கிறது கதை ?
நாயகன்: சசிகுமார் – தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
நாயகி: லிஜோ மோல் ஜோஸ் – அழுத்தமான, உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கியுள்ளார்.
வில்லன்: சுதேவ் நாயர் – அதிகாரத்தின் கீழ் தமிழர்களுக்கு கொடுமை செய்கிறவர்.
மற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சரவணன் , போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா போன்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக செய்துள்ளனர்.
சிறப்பம்சங்கள்:
ஹீரோவாக இருந்தாலும், சசிகுமார் தனது கதாபாத்திரத்தில் அடிபட்டுக் கொடுமைப்படும் பாத்திரத்தை உணர்வோடு நடித்துள்ளார்.
மகளைக் காணாத தாயின் ஏக்கம், கணவனை காணும் முயற்சிகள் நெஞ்சை உருக்கும்.
தொழில்நுட்பம்:
இசை: ஜிப்ரான் – உணர்வுகளை வளர்க்கும்.
ஒளிப்பதிவு: உதயகுமார் – காலகட்டத்தின் உண்மைத்தன்மையை சாடாமல் காட்டுகிறார்.
உணர்வு சார்ந்த வசனம்:
"சுதந்திரம் என்பது பிரச்சனைகள் இல்லாமல் வேற்று மண்ணில் வாழ்வது அல்ல; சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வது…"
விமர்சனக் கருத்து:
இது ஒரு சாதாரண திரைப்படமல்ல. உண்மையை பேசும், உணர்வை பரப்பும், வரலாற்றை மறக்காமல் பதிவு செய்யும் முயற்சியாக உள்ளது. இயக்குநர் சத்யசிவாவும், நடிகர் சசிகுமாரும் தங்களது பணியை மிகச்சிறப்பாக செய்துள்ளனர். சிறு குறைகள் இருந்தாலும், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படியொரு படைப்பு வேண்டியது அவசியம். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு தாக்கத்தை உருவாக்கும்.
Rating : 3.5 / 5








கருத்துகள் இல்லை