சற்று முன்



தநைரா தேசிய கைத்தறி தினத்தில், ஜிஐ டேக் செய்யப்பட்ட பிரத்தியேக ஆடைகளுடன் நம்பகத்தன்மையையும் பாரம்பரியத்தையும் உறுதி செய்திருக்கிறது !

 


தநைரா தேசிய கைத்தறி தினத்தில், ஜிஐ டேக் செய்யப்பட்ட பிரத்தியேக ஆடைகளுடன் நம்பகத்தன்மையையும் பாரம்பரியத்தையும் உறுதி செய்திருக்கிறது ! 

இந்தியாவின் வளமையான ஜவுளி பாரம்பரியத்தின் நீண்ட கால மரபை வலுப்படுத்துவதோடு, கைவினைத் திறன் மிக்க கலைஞர்களையும் ஊக்குவிக்கிறது தநைரா.

சென்னை:- தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாட இந்தியா தயாராகி வரும் நிலையில், டாடா குழுமத்தைச் சேர்ந்த தநைரா நிறுவனமானது தங்களது தயாரிப்புகளில் ஜியோகிராபிகல் இன்டிகேஷன் (GI) டேக்கை [GI tagging] அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தநைரா, நம் நாட்டின் நீண்ட பாரம்பரியமிக்க ஜவுளி மரபை பாதுகாப்பதில் தான் கொண்டிருக்கும் உறுதியான செயல்பாட்டை மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தி இருக்கிறது. ஜவுளி தொழில்துறையில் தரத்தையும், புதுமையையும் செயல்படுத்துவதில் முன்னோடியாக இருந்து வரும் தநைரா, இந்தியாவில் GI சான்றளிக்கப்பட்ட புடவைகளை அறிமுகப்படுத்தும் ஒரு சில இந்திய கிளாசிக் புடவை பிராண்டுகளில் ஒன்றாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பனாரசிகள், சந்தேரி மற்றும் மகேஷ்வரி போன்ற முக்கிய புடவை வகைகளுடன் இம்முயற்சியைத் தொடங்கியிருக்கிறது. இந்த முயற்சி, தறிக்குப் பின்னால் கலைநயமிக்க புடைவைகளை உருவாக்கும் கைகள், தலைமுறை தலைமுறையாக அவர்களின் கைவினைத்திறனை மேம்பட செய்த புவியியல் சார்ந்த சூழல் மற்றும் ஒவ்வொரு துணியிலும் நெய்யப்பட்ட மரபுகள் ஆகியவற்றின் மீது தநைரா பிராண்ட் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது. தநைராவின் நம்பகத்தன்மை மற்றும் கைவினைத்திறனின் நெறிமுறையை உயர்த்துவதோடு, வாடிக்கையாளர்கள் மற்றும் தங்களது கைவினை பாரம்பரியத்தை தொடர்ந்து வரும் கைவினைஞர்களுக்கு இடையே அவர் ஒரு ஆழமான உறவை உண்டாக்குவதையே தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது. தநைரா அறிமுகமானதிலிருந்தே அதன் மைய நோக்கம் என்பது, உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இவை இரண்டும் இருந்து வந்துள்ளன. கைத்தறியிலிருந்து பட்டு நெய்யப்படுவது வரை, அடுத்து ஜரி சான்றிதழ்கள் பெறுவது வரை என ஒவ்வொரு தயாரிப்பும் தநைராவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்நிலையில், GI டேக்கிங் முறையின் அறிமுகம் வாடிக்கையாளர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் பாரம்பரியமிக்க ஜவுளிகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரவேண்டுமென்ற தநைரா பிராண்டின் தொலைநோக்குப் பார்வையை சாத்தியப்படுத்தி இருக்கிறது.

இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, தநைரா அதன் விற்பனைதாரர்கள் மற்றும் கைவினைஞர்களுடன் நெருக்கமாக பணியாற்றி, GI சான்றிதழ் பெறுவதற்கான ஆவண ஆதரவு, சட்ட ஆலோசனை மற்றும் நிகழ்நிலை செயல்பாடுகளுக்கான ஆதரவை வழங்குகிறது. தொழில்நுட்பத்தினால் ஜவுளி துறையில் நெய்யப்படுவது அதிகரித்து, கைவினைஞர்களுக்கான அங்கீகாரம் குறையும் சூழலில், இந்த முயற்சி பாரம்பரிய கைத்தறி நெய்த துணியின் வசீகரிக்கும் அழகு மற்றும் நீடித்த கலை நயத்தையும் தக்க வைப்பதற்கான ஒரு தீர்க்கமான முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது.

தநைரா கைத்தறி சில்லறை விற்பனையில் சான்றளிக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான அணுகுமுறையை முன்னெத்து வருகிறது. கைத்தறி முத்திரைச்சான்று, பட்டு முத்திரைச்சான்று, ஜரி சான்றிதழ், காதி சான்றிதழ் மற்றும் பஷ்மினா சான்றிதழ் போன்ற பெரும் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் நம்பகத்தன்மை குறியீடுகளின் தொகுப்பை தநைரா பின்பற்றி வருகிறது. தற்போது. GI டேக்கிங் சேர்க்கப்பட்டதன் மூலம், இந்த சான்றிதழ் தொகுப்பு இப்போது ஒவ்வொரு நெசவும் அதன் உரிமைமிக்க பாரம்பரிய பகுதியிலிருந்தும், தலைமுறை தலைமுறையாக அதை நிலைநிறுத்திய கைவினைஞர்களிடமிருந்தும் உருவாகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த மைல்கல் முயற்சி குறித்து, தநைராவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அம்புஜ் நாராயண் கூறுகையில், “தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் நெசவு மரபுகளைப் பாதுகாப்பதற்கும், எங்கள் கைவினைஞர் சமூகங்களை ஆதரிப்பதற்கும் எங்கள் பயணத்தில் மற்றொரு அர்த்தமுள்ள படியை முன் எடுத்து வைப்பதில் தநைராவில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கைவினைக் குழுக்களுடன் கூட்டு சேர்ந்து, GI-டேக் செய்யப்பட்ட தயாரிப்புகள் உட்பட சான்றளிக்கப்பட்ட நெசவுகளை வழங்குகிறோம். இதன் மூலம், கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்கள் தகவலறிந்த, அசலான தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கவும் உதவும் ஒரு வெளிப்படையான விற்பனயை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த முயற்சியின் மூலம், அழகியலுக்கு அப்பாற்பட்ட புடவைகள், நம்பகத்தன்மையை உள்ளடக்கிய ஆடைகள், பாரம்பரியத்தைச் சுமந்து செல்லும் பொறுப்பு மற்றும் இந்தியாவின் கலாச்சார செழுமையை உலகிற்குப் பிரதிபலிக்கும் ஆர்வம் என எல்லாவற்றிலும் எங்களது அர்ப்பணிப்பு இம்முயற்சியின் மூலம் தொடரும்’’ என்றார்.

தநைரா, புடவை நெய்யும் கைவினைஞர்களின் சமூகங்களுடன் தீவிரமாக இணைந்து செயல்படுவதன் மூலம், இந்திய ஜவுளிகளை வரையறுக்கும் பாரம்பரிய அறிவார்ந்த கலை அம்சங்களைப் பாதுகாக்க முயன்று வருகிறது., அதே நேரத்தில் நெசவு கைவினைஞர் சமூகங்கள் சரியான அங்கீகாரத்தைப் பெறுவதையும் உறுதி செய்கிறது. GI டேக் செய்யப்பட்ட சேலையை வைத்திருப்பது என்பது இந்தியாவின் கலாச்சார புவியியல், வரலாறு மற்றும் கைவினைத்திறனின் ஒரு உறுதியான கலவையை நமக்கு சொந்தமாக்குவதாகும். இந்த சேலைகள் பாரம்பரியத்தை மட்டும் பேணுவதில்லை. உண்மையில் இவை தயாரிக்கப்படும் விதத்தின் இயல்பால், கைத்தறி சேலைகள் காற்றோட்டமாக சுவாசிக்கக்கூடியவை. நீடித்து உழைக்க கூடியவை. மேலும் பல தலைமுறைகளுக்கு தொடர்ந்து நிலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இவை அரவணைப்பையும், காலத்தால் அழியாத நேர்த்தியையும் ஒருங்கிணைக்கின்றன.

தநைரா அதன் ஜிஐ டேக் செய்யப்பட்ட கிளஸ்டர்களின் போர்ட்ஃபோலியோவை மேலும் பரவலாக விரிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது, மேலும் தற்போது 10 பிற பிராந்தியங்களின் நெசவுகளை இணைக்கும் முயற்சிகள் செயல்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு புதிய பிராந்தியத்தின் சேர்க்கையுடனும், அங்கீகரிக்கப்பட்ட, பிராந்திய-குறிப்பிட்ட கைத்தறிகளை நவீன இந்தியப் பெண்களுக்கு எளிதில் கிடைக்க கூடியாதாக செய்வது, அதே நேரத்தில் ஒவ்வொரு முயற்சியிலும் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவது என்ற தனது தொலைநோக்குப் பார்வையை தநைரா நெருங்கி வருகிறது. இந்த தேசிய கைத்தறி தினத்தில், ஒவ்வொரு நூலிலும் பின்னப்பட்ட கதைகள், மண் வாசனை மற்றும் ஆன்மாவைக் கண்டறிய வாடிக்கையாளர்களை தநைரா அன்புடன் அழைக்கிறது.

தநைரா பற்றி

டாடா குழும நிறுவனமான டைட்டனில் இருந்து வெளியாகும் பெண்களுக்கான பாரம்பரிய ஆடைகள் பிராண்டான தநைரா (Taneira), இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட பிரபல நெசவு கூடங்கள் இருக்கும் இடங்களிலிருந்து தூய்மையான, இயற்கை இழைகளாலான பல்வேறு வடிவங்களில் அமைந்த சேலைகள், ரவிக்கைகள், உடனடியாக அணியக்கூடிய குர்தா வகைகளை, இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வகைகளை ஒரே கூரையின் கீழ் வழங்குகிறது. டாடா நிறுவனத்திற்கான நம்பிக்கையைப் பின்பற்றி பிரத்யேகமான கைவினைத்திறன்கள், வடிவமைப்புகளோடு இந்திய பாரம்பரியத்தையும் நவீனத்தையும் ஒருங்கே கொண்ட இந்தியப் பெண்களுக்கு பல்வேறுபட்ட கைவினைத்திறன்மிக்க ஆடைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் சிறப்பு விழாக்கள் உட்பட அனைத்து தருணங்களிலும் தினமும் நாகரிகமாகத் தோற்றமளிக்கும் வகையிலும் ஒரு பெண் தன்னைத்தானே அலங்கரித்துக்கொள்ள விரும்புவதை பூர்த்தி செய்வதை இத்தயாரிப்புகள் உறுதி செய்கின்றன.

கைவினைத்திறன்மிக்க தயாரிப்புகளை நம்பகத்தன்மையுள்ள இழைகளைக் கொண்டு உருவாக்குவதற்கான முயற்சியாக, இந்தியா முழுவதுமுள்ள நெசவுச் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி ‘நெசவுக்கூடம்’ எனப் பொருள்படும் ‘வீவர்சாலா’வை (Weavershala) அறிமுகப்படுத்தியுள்ளது தநைரா; நெசவுத் தொழில்நுட்பங்களை நவீனமாக்குவது மட்டுமல்லாமல் எதிர்காலத் தலைமுறைக்கு கைகளைக் கொண்டு நெய்யும் பாரம்பரிய நெசவுமுறைகளைப் பாதுகாத்து அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம். வட்டார நெசவாளர் சங்கங்களுடன் இணைந்து நெசவாளர்களுக்கு அனைத்து முக்கியமான பணியிட வசதிகளுடன் கூடிய பிரேம் தறிகளை (frame looms) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது, நாடு முழுவதிலும் 18 நெசவுக்கூடங்களை இயக்கி வருகிறது தநைரா.

2017-ல் தொடங்கப்பட்ட தநைரா, தற்போது 41 நகரங்களில் 80 விற்பனையகங்கள் என மிகப் பலமான நெட்வொர்க் மூலமாக மிகச்சிறந்த பணியாளர்களைக் கொண்டு தரமான சேவையைத் தருகிறது; ஒரு தனித்துவமான, நிதானமிக்க தங்களுக்குப் பிடித்தமானதை தேடி கண்டெடுக்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. நாட்டிலுள்ள முதல் தர, இரண்டாம் தர நகரங்களில் தனது செயல்பாடுகளை வலுவாகக் கட்டமைக்கும் வகையில் அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் விற்பனையகங்களைக் கொண்டுள்ளது. www.taneira.com 


கருத்துகள் இல்லை