கடுக்கா திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகரான விஜய் கெளரிஷ் நடிப்பில் கடுக்கா. மற்றும் நடிகை ஸ்மேஹா ,ஆதர்ஷ் , மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் எஸ் முருகரசு .
கதை ஆரம்பமே :
வயதுக்கு ஏற்ற பொறுப்பு ஏதும் இல்லாமல், அம்மாவின் உழைப்பில் வாழும் விஜய் கெளரிஷ், வீட்டுக்கு எதிரே குடிபெயரும் ஸ்மேஹாவை பார்த்ததும் காதலிக்கிறார். ஆனால், அவரது நண்பர் ஆதர்ஷும் அதே பெண்ணை காதலிக்கிறார். இருவருக்கும் தெரியாமல் காதல் தொடரும் நிலையில், ஸ்மேஹா இருவரிடமும் சமமாக நடந்து, அவர்களை காதல் குழப்பத்தில் சிக்கவைக்கிறார். அவர் உண்மையில் யாரையும் காதலிக்கிறாரா? அல்லது இருவரையும் ஏமாற்றுகிறாரா? என்பதே கதை.
நடிப்பு:
விஜய் கெளரிஷ் – வேலை இல்லாத இளைஞனின் அப்பாவித்தனத்தையும், காதல் பித்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஸ்மேஹா – எளிமையான பக்கத்து வீட்டு பெண் போல, பெண்களின் மனக்குமுறலையும் நம்ப வைக்கும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
ஆதர்ஷ் – நாயகனின் நண்பராக சரிவர இணைந்திருக்கிறார்.
மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா உள்ளிட்டவர்கள் கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பம்:
இசை (கெவின் டி. கோஸ்டா): பாடல்கள் இனிமையாக இருந்தாலும், பின்னணி இசை மேலும் வலிமையுடன் இருக்கலாம்.
ஒளிப்பதிவு (சதிஷ் குமார் துரைகண்ணு): கிராமத்து சூழலையும், டீக்கடை, பேருந்து நிலையம் போன்ற இடங்களையும் இயல்பாகப் படம்பிடித்துள்ளார்.
படத்தொகுப்பு (ஜான்சன் நோயல்): சுருக்கமான எடிட்டிங், நகைச்சுவை ரிதமைக் கூட்டியுள்ளது.
இயக்கம்:
எஸ். எஸ். முருகரசு, இரண்டு இளைஞர்களின் காதலை நகைச்சுவையாக சொல்லிக்கொண்டே, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை இறுதியில் சீரியஸாக பதிவு செய்திருப்பது சிறப்பாக இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சிரிப்பைத் தருவதோடு, முடிவில் சிந்திக்க வைக்கிறது.
மொத்தத்தில்:
“கடுக்கா” – இளைய தலைமுறையின் காதல் மயக்கத்தையும், பெண்கள் எதிர்கொள்ளும் மனக்கசப்பையும் நகைச்சுவையுடன் சித்தரித்து, இறுதியில் இதயம் கனக்க செய்யும் செய்தியுடன் முடிகிறது.
Rating : 3 / 5









கருத்துகள் இல்லை