சற்று முன்



டைட்டனின் ராகா, இளமைத் துள்ளும், வசீகரத்துடன் கவர்ந்திழுக்கும் ஆளுமையுள்ள பெண்களுக்காக அறிமுகப்படுத்தும் ‘காக்டெய்ல்ஸ்’ கைக்கடிகாரங்கள் !

 



டைட்டனின் ராகா, இளமைத் துள்ளும், வசீகரத்துடன் கவர்ந்திழுக்கும் ஆளுமையுள்ள பெண்களுக்காக அறிமுகப்படுத்தும் ‘காக்டெய்ல்ஸ்’ கைக்கடிகாரங்கள் !




புதிய கைக்கடிகாரத் தொகுப்பான ராகா காக்டெய்ல்ஸ்-ன் அழகை பிரதிபலிக்கும் முகமாக பிரபல திரை நட்சத்திரம் ஆலியா பட் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார். மும்பையில் நடைபெற்ற கோலாகலமான விருந்தில் அனைதா ஷராஃப் அடஜானியா, காக்டெய்ல்ஸ் கைக்கடிகாரத் தொகுப்பின் வசீகரத்தையும், பாணியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ரசனைமிக்க வடிவமைப்பிற்கும், நுணுக்கமாக நேர்த்திக்கும், துல்லியத்திற்கும் பிரபலமான டைட்டனின் ராகா, புத்தம் புதிய கைக்கடிக்கார தொகுப்பான ‘ராகா காக்டெய்ல்ஸ்’ அறிமுகப்படுத்தி இருக்கிறது. விருந்துகளில் பரிமாறப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட பானங்கள், மிக நேர்த்தியாக விதவிதமாக கலக்கப்படும் போது, ஒவ்வொரு ‘காக்டெய்ல்’லும் அவற்றுக்கான தனித்துவமான உணர்வை அளிக்கிறது. அதைப் போலவே ராகா காக்டெய்ல்ஸ் கைக்கடிகாரத் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கைக்கடிகாரமும், இன்றைய நவீன பெண்களின் வசீகரத்தையும், ஆளுமையையும், கம்பீரத்தையும் வெளிப்படுத்துகின்றன. ’ராகா காக்டெய்ல்ஸ்’ கைக்கடிகாரங்கள், இரவு விருந்தில் விளக்குகள் மங்கலாக இருந்தாலும், உங்களை ஜொலிக்க செய்யும், இது வரையறைகளுக்கு பொருந்துவது பற்றியது அல்ல. இது பெண்களின் நளினத்தை வெளிப்படுத்துவது. மற்றவர்களுக்கு மத்தியில் நிமிர்ந்து நிற்பது பற்றியது. இத்தனை அம்சங்களையும் ஒரு காக்டெய்ல் போல் வெளிப்படுத்துவகையில், ‘ராகா காக்டெய்ல்ஸ்’ அறிமுகமாகி இருக்கிறது. சமகால பெண்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நேர்த்தியான கடிகாரங்களுக்கு மறு பெயராக புகழ் பெற்றிருக்கும் டைட்டன் ராகா, முன்னெடுக்கும் இப்பிரச்சாரத்தின் முகமாக பிரபல திரை நட்சத்திரம் ஆலியா பட் இணைந்திருக்கிறார்.

ராகா கைக்கடிக்காரங்களுக்கென நீண்ட காலமாக இருக்கும் மரபில், ஒரு துணிச்சலான புதிய அத்தியாயமாக ‘காக்டெய்ல்ஸ்’ தொகுப்பு, ஐந்து அட்டகாசமான கடிகாரங்களை வழங்குகிறது. இவை ஒவ்வொன்றும் ஒரு புதிய உரையாடலைத் தொடங்கும் வகையில் கவனத்தை ஈர்க்கின்றன. அழகியலுடன் வசீகரத்தை கலக்கும் நேர்த்தியான வடிவங்கள், ஒளிரும் சூரியக் கதிர் டயல்கள் மற்றும் கிரிஸ்டல் பதிக்கப்பட்ட விவரணங்களுடன், இந்தத் தொகுப்பு பளபளப்பான தங்கம், தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் மற்றும் அழகான இளஞ்சிவப்பு நிறங்களில் [glistening gold, eclectic blue and pretty pink] கண்களைக் கவர்கின்றன. ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஒவ்வொரு விதமாக பார்க்கும் போதும் பளீச்சென்று மினுமினுப்பது உங்களை தனித்துவப்படுத்தி காட்டும். எத்தனைப் பேர் இருந்தாலும், உங்களது தோற்றத்தையும், ஆளுமையையும், வசீகரத்தையும் தனித்து காட்ட உதவும், அழகும், நுட்பமும் கலந்த ஒரு காக்டெய்ல் போல ரசிக்கத் தூண்டுகிறது.

“காக்டெய்ல்ஸ் கைக்கடிகாரத் தொகுப்புடன், நேர்த்தியான கைக்கடிகாராங்களை மட்டுமில்லாமல், ஒரு கோலாகலமான கொண்டாட்டத்தில் நிறைந்திருக்கும் கூட்டத்தில் தனித்துவமிக்கதாக வசீகரிக்க செய்யும் ஒரு கைக்கடிகாரத்தை உருவாக்க நாங்கள் விரும்பினோம்,” என்று டைட்டன் வாட்ச்ஸ் நிறுவனத்தின் சி.எம்.ஒ ரஞ்சனி கிருஷ்ணசாமி கூறினார். “இந்தத் தொகுப்பு தங்களது ஆளுமையை வெளிப்படுத்தும் அலங்கார அணிகலன்களைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் நவீன இந்தியப் பெண்ணின் மகத்துவமான தனித்துவத்தைக் கொண்டாடுகிறது. எந்தவிதமான போலியான வெளிப்பாடும் இல்லாமல், தனது அசல் குணத்தைன் மீது நம்பிக்கையுடனும், தன்னை மற்றவர்கள் பார்ப்பதை தைரியத்துடன் எதிர்கொள்ளும் ஆளுமையுடனும் இருக்கும் பெண்களுக்கான ஒன்றாக ‘காக்டெயில்ஸ்’ இருக்கும். இன்று, நம்மில் பலர் மென்மை மற்றும் வலிமையின் இந்த முரண்பாட்டை விவேகத்துடன் கையாள்வதை காண்கிறோம். ஒரு பெண்ணாகவும், ஒரு நடிகையாகவும் கருணை மற்றும் உறுதியுடன் தனது இரு இரண்டு முகங்களையும் வெளிப்படுத்தும் ஆலியா பட், ’ராகா காக்டெய்ல்ஸ்’ கைக்கடிக்காரத்தொகுப்பின் அடையாளமாக இருக்கிறார்’’ என்று அவர் மேலும் கூறினார்.

ராகா காக்டெய்ல்ஸ்’ கைக்கடிகாரத் தொகுப்பின் அறிமுக விழா மும்பையில் இருக்கும் மிராஜ் -ல் நடைபெற்றது. இவ்விழாவில் விருந்தினார்கள் தங்களுக்கு துணையாக பலம் சேர்க்கும் பெண்களை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண் சகோதரியாகவோ, தோழியாகவோ, வழிகாட்டியாகவோ இருக்கலாம். அவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்வாக இதை ராகா கொண்டாடியது. மாலையின் சிறப்பம்சமான ’தி ஸ்டைல் மிக்சர்’, ஃபேஷன் துறையின் பிரபலம் அனைதா ஷ்ராஃப் அடஜானியாவால் வடிவமைக்கப்பட்ட ஒரு நேரடி ஃபேஷன் நிகழ்ச்சி அமைந்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கைக்கடிகாரங்கள் ஸ்டைலுடன், ஒவ்வொரு உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டது. காக்டெய்ல் கலப்பதில் பிரபலமான் செலிபிரிட்டி மிக்ஸாலஜிஸ்ட் ஏமி ஷ்ராஃப், ஒவ்வொரு பானமும் அதன் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட காக்டெய்ல்களுடன் உற்சாகத்தை அதிகரித்தார். இது அழகியலும், ரசனையும், உற்சாகமும் காக்டெய்ல்களாக கலந்த ஒரு நிகழ்வாக நடைபெற்றது.

ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் & கிரியேட்டிவ் டைரக்டர் அனைதா ஷ்ராஃப் அடஜானியா கருத்து தெரிவிக்கையில், "கண்களை கவரும், பார்ப்பதற்கு பளீச்சென்று தெரியும் ஆபரணங்களில், ஒரு மறுமலர்ச்சியை நாங்கள் காண்கிறோம். இன்றைய பெண்கள் பிரகாசமாக ஜொலிப்பதிலும், சுதந்திரமாக தங்களை வெளிப்படுத்துவதிலும் பயப்படுவதில்லை. ராகா காக்டெய்ல்ஸ் தொகுப்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனநிலை மற்றும் முக்கிய தருணங்கள் என இந்த கைக்கடிகாரங்களுக்கான பாணியை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்றார்.

’ராகா காக்டெய்ல்ஸ்’ கைக்கடிக்காரங்களின் உலகிற்குள் நுழைந்து இரவை உற்சாகப்படுத்துங்கள்! ₹42,495 முதல் ₹49,995 வரை விலையில் கிடைக்கும் இந்த தொகுப்பு இப்போது டைட்டன் விற்பனை நிலையங்களிலும் www.titan.co.in என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது.

டைட்டன் கம்பெனி லிமிடெட் பற்றி:

டைட்டன் கம்பெனி லிமிடெட் [Titan Company Limited ("Titan")], டாடா குழுமம் [Tata Group] மற்றும் தமிழ்நாடு தொழில்துறை முன்னேற்ற வாரியம் [Tamil Nadu Industrial Development Corporation (TIDCO)] ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக 1987-ல் டைட்டன் வாட்ச்சஸ் லிமிடெட் [Titan Watches Limited] என்ற பெயரில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. 1994-ம் ஆண்டில், டைட்டன் ஜூவல்லரி (தனிஷ்க்) பிரிவிலும் தடம் பதிக்கும் வகையில் பன்முகப்படுத்தப்பட்டது. பின்னர் ஐகேர் நிறுவனமாகவும் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தியது. கடந்த முப்பது ஆண்டுகளாக, டைட்டன் மக்களுக்கு தனது தயாரிப்புகள் சென்றையடையாத சந்தைகளில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தி வருகிறது. மேலும், வாசனை திரவியங்கள் (SKINN), பயன்பாட்டு அணிகலன்கள் மற்றும் இந்திய ஆடைகள் (Taneira) உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை தயாரிப்பு பிரிவுகளில் வலுவான பிராண்டுகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் கைக்கடிகாரம் மற்றும் நகைத் தொழிலை மாற்றியமைப்பதற்காகவும், அனுபவமிக்க சில்லறை வர்த்தகத்தில் முன்னோடியாக இருப்பதன் மூலம் இந்தியாவின் சில்லறை சந்தையை வடிவமைப்பதற்காகவும் டைட்டன் மிகவும் பிரபலமான பிராண்டாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு : https://www.titancompany.in/


கருத்துகள் இல்லை