போகி திரை விமர்சனம் ! Review
போகி திரைவிமர்சனம் .
நபி நந்தி , சரத் , சுவாசிகா , மொட்டை ராஜேந்தர் , சங்கிலி முருகன் , எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் விஜய் சேகரன்.
கதை ஆரம்பமே :
வனப்பகுதியில் வசிக்கும் நபி நந்தி தன் தங்கை சுவாசிகாவை அன்புடன் வளர்க்கிறார். மாநில முதலிடம் பெற்று மருத்துவம் படிக்க நகரம் வரும் சுவாசிகா, அங்கு நடக்கும் குற்றச்செயலில் சிக்குகிறாள். தங்கை மீது நிகழ்ந்த அநீதி கண்டு பொங்கும் நபி நந்தியின் போராட்டமே கதையின் மையம்.
சுவாசிகா தனது நடிப்பால் படத்தின் உயிராக உள்ளார். மொட்ட ராஜேந்திரன் வில்லனாக புதுமையான அச்சத்தை ஏற்படுத்துகிறார். சரத், வேல ராமமூர்த்தி, சங்கிலி முருகன், எம் எஸ் பாஸ்கர் போன்றோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ராஜா சி சேகரின் கேமரா வேலை சிறப்பாக உள்ளது; பாடல்கள் அதிகம் இருந்தாலும் இசை தரம் நன்றாக உள்ளது.
மார்ச்சுவரியில் பெண்கள் மீதான அநீதி, சிசிடிவி-செல்போன் ஆபத்துகள் போன்ற சமகால பிரச்சனைகளை இயக்குனர் தொட்டு பார்க்கிறார். ஆனால் காட்சிகளுக்கு இடையில் தொடர்ச்சியின்மை மற்றும் திடீர் முடிவு குறையாக உள்ளது. அநீதியை குரல் கொடுக்கும் கதையாக அமைந்துள்ளது.
Rating : 2.5 / 5








கருத்துகள் இல்லை