சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான வெற்றி நடிப்பில் சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ மற்றும் நடிகை சில்பா மஞ்சுநாத் , தம்பி ராமையா , மகேஷ் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் அனிஷ் அஷ்ரப் .
கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் வந்திருக்கும் இந்த படம், பத்திரிகையாளர் வெற்றி தொடர் கொலை வழக்கை விசாரிக்கும் கதையைச் சுற்றி நகர்கிறது. வெற்றி கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி, வழக்கமான நடிப்பிலிருந்து விலகி, நகைச்சுவை மற்றும் துப்பறியும் காட்சிகளில் நல்ல முன்னேற்றம் காட்டியிருக்கிறார்.
நாயகி சில்பா மஞ்சுநாத் அதிக முக்கியத்துவமில்லாத வேடத்தில் நடித்தாலும், தம்பி ராமையா வழக்கமான உடல்மொழியுடன் நகைச்சுவை மற்றும் சீரியஸ் காட்சிகளில் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமான மகேஷ் தாஸ், உடல் மொழியால் பயமுறுத்தியிருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி காட்சிகள் தேவையற்றவை போல் தோன்றினாலும், ஏ.ஜே.ஆர் இசை, அரவிந்த் ஒளிப்பதிவு, விஷால் எடிட்டிங் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது.
இயக்குநர் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் கதையோடு சமூகச் செய்தியையும் இணைத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கடுமையாகக் கண்டிக்கும் விதத்தில் கமர்ஷியலாக சொன்னுள்ளார். சில கதாபாத்திர வடிவமைப்புகளில் குறைகள் இருந்தாலும், திரைக்கதை மற்றும் வெற்றியின் நடிப்பு படம் ரசிக்க வைக்கிறது.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை