சற்று முன்



இந்திரா திரை விமர்சனம் ! Review

தமிழ் சினிமா உலகில் நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வசந்த் ரவி ‌ அவரது நடிப்பில் இந்திரா. 

மற்றும் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா , அனிகா சுரேந்தர் , சுனில் ,நாகேந்திரா , மாஸ்டர் கல்யாண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சபரீஷ் நந்தா.

கதை ஆரம்பமே

வசந்த் ரவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். அவர் கண் பார்வை இழந்தபின், தன் மனைவியை இழந்த துயரத்தில் இருந்தாலும், சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க எவ்வாறு போராடுகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் இந்திரா.

வசந்த் ரவி கண் பார்வையற்றவராக நடித்த விதமும், உணர்ச்சிகளை அளவாக வெளிப்படுத்தியதும் படத்திற்கே பலமாக இருக்கிறது. 


மெஹ்ரீன் பிர்சாடா தன் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடன் நடித்துள்ளார். 

சுனில் சீரியல் கில்லர் கதாபாத்திரத்தில்  பார்வையாளர்களை பீதியடையச் செய்கிறார். 

அனிகா சுரேந்தர் சிறிது நேரம் வந்தாலும் கதையின்  முக்கிய கருவாக இருக்கிறார்.

நாகேந்திரா, நடன இயக்குநர் கல்யாண் அனைவரும் கதைக்குப் பலம் சேர்த்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவின் லைட்டிங், பிரேம்கள், குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மிரட்டுகின்றன. அஜ்மல் தஷீனின் இசை காட்சிகளை மேலும் தீவிரப்படுத்துகிறது. எடிட்டர் பிரவீன்.கே.எல் திரைக்கதையை நெருக்கமாக வைத்திருக்கிறார்.

இயக்குனர் சபரிஷ் நந்தா, சைக்கோ கில்லர் கதையைக் கொண்டு சென்றாலும், பாரம்பரியமான பாணியை விட்டு விலகி, எதிர்பாராத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதி வரை கவர்ந்துள்ளார்.

மொத்தத்தில், ‘இந்திரா’ எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த, பதற்றத்தையும் ஆச்சரியத்தையும் தரும் சூப்பர் கிரைம் திரில்லர்.

Rating : 3 / 5 



கருத்துகள் இல்லை