ஹவுஸ் மேட்ஸ் திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான தர்ஷன் நடிப்பில் ஹவுஸ் மேட்ஸ் . மற்றும் காளி வெங்கட் , அர்ஷா பைஜு , வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ராஜாவேல்.
திருமணத்திற்குப் பிறகு சொந்த வீட்டை வாங்கும் தர்ஷன், அந்த வீட்டில் வினோதமான சம்பவங்களை சந்திக்கிறார். முதலில் இது வழக்கமான பேய் படம் போல இருந்தாலும், இயக்குநர் டி. ராஜவேல் சயின்ஸ் ஃபிக்ஷன் ட்விஸ்டை கொண்டு வந்து கதையை வித்தியாசமாக மாற்றுகிறார். ‘டெசராக்ட்’ எனப்படும் கற்பனை நிலை காரணமாக 2012 மற்றும் 2022 ஆண்டுகளில் வாழ்ந்தவர்கள் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் இருப்பதை காட்டியிருப்பது புதுமையாக உள்ளது.
நடிப்பில் தர்ஷன், அர்ஷா பைஜு நன்றாக இருந்துள்ளனர். காளி வெங்கட், வினோதினி ஜோடி, அவர்களின் மகனாக மாஸ்டர் ஹென்ரி ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒளிப்பதிவும் (M.S. சதீஷ்) இசையும் (ராஜேஷ் முருகேசன்) படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
பாசிட்டிவ்: புதுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் கன்செப்ட், நல்ல நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள்.
சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது.
Rating : 4 / 5








கருத்துகள் இல்லை