சரண்டர் திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிப்பில் சரண்டர் மற்றும் லால் , மன்சூர் அலிகான் , சுஜித் , முனீஸ்க்காந்த் , ரம்யா , கௌஷிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கௌதமன் கணபதி.
“சரண்டர்” என்பது கைதியின் சரணடிதல் அல்ல, ஒரு துப்பாக்கியின் சரணடிதல். மன்சூர் அலிகான் தனது துப்பாக்கியை போலீசில் ஒப்படைக்கும் போது அது காணாமல் போகிறது. அதைத் தேடிக்கொள்வது பயிற்சி எஸ்.ஐ. தர்ஷனின் பொறுப்பு.
இதே நேரத்தில், தேர்தல் செலவுக்காக தாதா சுஜித் கொடுத்த பத்து கோடி பணமும் காணாமல் போகிறது. தர்ஷன் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் நேர்மையான அதிகாரி லால், இந்த துப்பாக்கி வழக்கால் அவமானப்படுகிறார். தாதா சுஜித்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக லாலின் அவமானம் அதிகரிக்க, தர்ஷன் அவருக்கு எதிராக கோபம் கொள்கிறார்.
படத்தின் இரண்டாம் பாதியில்தான் தர்ஷன் டேக் ஆஃப் செய்கிறார். தாதா சுஜித்தும் அவரது சகோதரரும் இயல்பாக நடித்துள்ளனர். லாலின் “எனக்கு ஒரு மகன் இருந்தால்…” எனும் வசனம் தர்ஷனின் உணர்ச்சியை தூண்டுகிறது.
மன்சூர் அலிகான் தனது சொந்த கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார். அரோல் டி. சங்கர் இன்ஸ்பெக்டராக வலிமையான தோற்றம் அளிக்கிறார். மெய்யேந்திரன் ஒளிப்பதிவும் விகாஸ் பாடிஷா இசையும் படத்தின் போக்குக்கு பொருத்தமாக உள்ளன.
இயக்குனர் கௌதமன் கணபதி படத்தைத் தொய்வின்றி இயக்கியுள்ளார். இன்னும் சிறு முயற்சி இருந்தால் பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.
மொத்தத்தில்: போலீஸ், துப்பாக்கி காணாமற்போனது, தேர்தல் காசு மாயம் ஆகியவற்றை இணைத்து எளிதான ஆனால் பிடித்துச் செல்லும் காவல் கதை.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை