வானரன் திரை விமர்சனம் ! Review
வறுமையும், காதலும், தந்தை-மகள் பாசமும் கலந்த நெஞ்சை நெகிழச் செய்யும் வாழ்க்கைப் படம் தான் 'வானரன்'.
நாயகனாக நடித்த பிஜேஷ் நாகேஷ், தெரு வீதியில் தாண்டி அன்பும் துயரமும் மிகுந்த ஆஞ்சநேயர் வேடத்தில், உணர்ச்சிகளை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். மகளுக்காக மனம் நொறும் காட்சிகளில் அவர் பார்வையாளர்களின் இதயத்தையும் கிழிக்கிறார்.
சிறுமி வர்ஷா, தைரியமாகவும், நயமாகவும் நடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே அவள் நடிப்பில் இயல்பு அடங்கி இருக்கும்.
நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர், தீபா சங்கர், நாஞ்சில் விஜயன் போன்றோர் கலந்துகொள்ளும் ஹ்யூமர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
ஷாஜகானின் இசை, நிரன் சந்தரின் ஒளிப்பதிவு, கதையின் உணர்வுகளை தழுவிய பாணியில் அமைந்துள்ளது.
இயக்குநர் ஸ்ரீராம் பத்மநாபன், கடவுள் வேடத்தில் வீதியில் காணிக்கை பெறும் மக்களின் வாழ்வியல் பின்னணியையும், மனித உணர்வுகளின் ஆழத்தையும் அழுத்தமாக சினிமா திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
மெசேஜ் : நாம் வழக்கமாக எளிதில் கடந்து செல்லும் கடவுள் வேடத்தாரின் பின்னாலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவூட்டும் வாழ்க்கை கதை.
முடிவுரை :
மனிதத்தன்மை மறையாத இந்த உலகில், வறுமையிலும் அன்பும் தியாகமும் நிறைந்த ஒரு தந்தையின் கதை ‘வானரன்’.
Rating : 3.5 / 5









கருத்துகள் இல்லை