காத்துவாக்குல ஒரு காதல் திரை விமர்சனம் ! Review
மாஸ் ரவி எழுதி இயக்கிய 'காத்துவாக்குல ஒரு காதல்' காதலும் மர்மமும் கலந்திருக்கும் மசாலா காதல் திரைப்படமாக அமைகிறது. கதாநாயகனாகவும், இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்கும் மாஸ் ரவி, மென்மையும் மாஸும் கலந்த நடிப்பில் கவர்ந்திழுக்கிறார். லட்சுமி பிரியா தனது அழகும், உணர்ச்சி வாய்ந்த நடிப்பும் மூலம் முக்கியமான இடத்தை பிடித்திருக்கிறார்.
படத்தின் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதியில் மர்மம், திருப்பங்கள் கூட்டி ரசிகர்களை ஈர்க்கிறது. ஜிகேவி மற்றும் மிக்கின் இசை, குறிப்பாக தேவா குரல் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கிறது. ஒளிப்பதிவு, கெட்டப்புகள், மற்றும் பின்னணி இசை படம் முழுவதும் அழகாக செயல்பட்டுள்ளன.
மொத்தத்தில், காதலுக்காக உயிர் கொடுக்கத் தயாரான ஒரு நாயகனின் பயணத்தையும், மர்மங்களுக்குள் அவனைக் தேடும் காதலியின் உணர்வையும் இணைத்துச் சொல்லும் ஒரு பரவசமான காதல் படம்.
Rating : 3 / 5








கருத்துகள் இல்லை