டிசிஎஸ் இன்குயிசிடிவ் 2025 சென்னைப் பதிப்பில் வெற்றிபெற்ற வேளம்மாள் போதி பள்ளி வளாக மாணவர்கள் தான்யாசாரதி மற்றும் வருண். எஸ் !
டிசிஎஸ் இன்குயிசிடிவ் 2025 சென்னைப் பதிப்பில் வெற்றிபெற்ற வேளம்மாள் போதி பள்ளி வளாக மாணவர்கள் தான்யாசாரதி மற்றும் வருண். எஸ் !
• டிசிஎஸ் இன்குயிசிடிவ் [TCS InQuizitive], 12 நகரங்களில் உள்ள உயர்நிலைப் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்டது. இந்த விநாடி-வினா போட்டி நாட்டின் பிரகாசமான இளையதலைமுறையினரின் அறிவுசார் ஆர்வத்தையும் தொழில்நுட்பத் திறன்களையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடந்தப்பட்டு வருகிறது.
சென்னை, செப்டம்பர், 16, 2025: தகவல் தொழில்நுட்ப சேவைகளில், ஆலோக சேவை, வர்த்தகத் தீர்வுகளில் உலகளாவிய அளவில் முன்னணியில் இருக்கும் டாடா கன்ஸல்டன்சி சர்வீசஸ் [Tata Consultancy Services (TCS) (BSE: 532540, NSE: TCS)] நடத்தும் வருடாந்திர விநாடி-வினா போட்டியான டிசிஎஸ் இன்குயிசிடிவ் [TCS InQuizitive]-ன் சென்னைப் பதிப்பில் 111 பள்ளிகளைச் சேர்ந்த 839 குழுக்கள் பங்கேற்றன. டிசிஎஸ் இன்குசியிட்டிவ் (TCS InQuizitive) விநாடி-வினா போட்டியில் எட்டு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்று தங்களது அறிவுத்திறனை வெளிப்படுத்தினர். குறிப்பாக, சென்னை பகுதியின் அறிவுத்திறன்மிக்க இளம் தலைமுறையினர் தங்களது அறிவுத்திறமையை நிரூபித்தனர்.
பிராந்திய இறுதிப் போட்டிகள் சென்னையிலுள்ள மியூசிக் அகாதமி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற போது தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும்இதரப் பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, புதுச்சேரி, திருச்சி, திருப்பதி மற்றும் வேலூர் பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
விநாடி-வினா போட்டியின் பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு, கோவையைச் சேர்ந்த வேலம்மாள் போதி வளாகத்திலிருந்து கலந்து கொண்ட தான்யாசாரதி மற்றும் வருண்..எஸ் ஆகிய இருவரும் வெற்றியாளர்களாகத் தகுதிபெற்றுள்ளனர். அதேநேரம் மயிலாப்பூரில் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் தர்ஷன் மற்றும் சம்ருத் இரண்டாமிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜெனீவா உலக வர்த்தக அமைப்பின் (WTO)-ன் நிரந்தர இந்தியப் பிரதிநிதியும் தூதருமான பிரஜேந்திர நவ்நீத், ஐஏஎஸ் [Mr. Brajendra Navnit, IAS, Ambassador and Permanent Representative of India] தலைமை விருந்தினராக கலந்து கொண்டதோடு, போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்வில் டிசிஎஸ் சென்னையின் டெலிவரி மையத் தலைவர் திரு. அலெக்ஸ் துரைசாமி [Mr. Alex Duraisamy, Delivery Centre Head, TCS Chennai] கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விநாடி-வினா போட்டியில் வெற்றிபெற்றவர்கள் மும்பையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்வார்கள். இந்தியா முழுவதுமிருந்து வெற்றி பெற்ற இதர பிராந்திய வெற்றியாளர்களுடன் இவர்கள் போட்டியிடுவார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக இளம் மனங்களை ஊக்குவிக்கும் அறிவார்ந்த திறனை வளர்க்கும் போட்டியாக டிசிஎஸ் இன்குயிஸ்டிவ் (TCS InQuizitive) முக்கியம் பெற்று வருகிறது. 8 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மத்தியில் அறிவுரீதியான ஆர்வத்தைத் தூண்டவும், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், விளையாட்டு, பொறியியல் மற்றும் கலைத்துறைகளில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடனும் இப்போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. டிசிஎஸ் இன்குயிஸ்டிவ் (TCS InQuizitive) போட்டி அஹமதாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, டெல்லி, ஐதராபாத், இந்தூர், கொச்சி, கோல்கத்தா, மும்பை, நாக்பூர் மற்றும் புனே என 12 நகரங்களில் நடந்த இந்தப் போட்டி செய்த பயணம் முக்கியமான அத்தியாயமாகும். இந்தப் போட்டி அரையிறுதிப் போட்டி மற்றும் இறுதிப் போட்டியாக மலர்ந்து, இறுதியில் டிசிஎஸ் இன்குயிஸ்டிவ் நேஷனல் சேம்பியன்ஷிப் 2025 [TCS InQuizitive National Champions] ஆக இந்தியாவில் ஒரு பள்ளியிலிருந்து ஒரு ஆணி தேர்ந்தெடுக்கப்படும்.







கருத்துகள் இல்லை