வோல்வோ கார் இந்தியா நிறுவனத்தின் புதிய பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் (BEV) எலக்ட்ரிக் வோல்வோ EX30அறிமுகம் !
வோல்வோ கார் இந்தியா நிறுவனத்தின் புதிய பேட்டரி எலக்ட்ரிக் வாகனம் (BEV) எலக்ட்ரிக் வோல்வோ EX30அறிமுகம் !
விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களின் பாராட்டு பெற்ற மற்றும் தயாரிப்பு வடிவமைப்பிற்கான ரெட் டாட் விருது மற்றும் 2024-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நகர்ப்புற கார் விருதுகளின் வெற்றியாளர் என்ற தனிச்சிறப்பை இவ்வாகனம் கொண்டிருக்கிறது
உங்கள் EX30-ஐ இப்போதே முன்பதிவு செய்து, டெலிவரியின் போது சிறப்புச் சலுகைகளைப் பெறுங்கள்
சென்னை, 4 செப்டம்பர் 2025: வோல்வோ கார் இந்தியா, தனது சமீபத்திய எலக்ட்ரிக் காரான EX30-ஐ பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மாநகரில் வோல்வோ தமிழ்நாட்டின், தேனாம்பேட்டை மற்றும் அம்பத்தூர் டீலர்ஷிப்களில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இப்புதிய எலக்ட்ரிக் காரில் சோதனை ஓட்டங்களை மேற்கொண்டு இனிய அனுபவத்தைப் பெறலாம். நாடெங்கிலும் கார் ஆர்வலர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த முழுமையான எலக்ட்ரிக் SUV, விலை விவரங்களுடன் செப்டம்பர் மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கான டெலிவரிகள் அக்டோபர் 2025 முதல் ஆரம்பமாகும். பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனமான EX30, கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவில் ஓசக்கோட்டையில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.
EX30, இதுவரை வெளிவந்த முழுமையான எலக்ட்ரிக் வோல்வோ கார்களிலேயே மிகக் குறைந்த கார்பன் தடத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, வோல்வோவின் மிகவும் நீடித்த நிலைத்தன்மை கொண்ட கார் என்ற பெருமையை இது பெறுகிறது. மேலும், இக்காரின் கவர்ச்சிகரமான உட்புறங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட டெனிம், PET பாட்டில்கள், அலுமினியம், PVC பைப்புகள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஸ்காண்டிநேவியன் பாணியிலான வடிவமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய EX30, யூரோ NCAP பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. EX30, சாலை சந்திப்புகளில் ஏற்படக்கூடிய மோதல்களைக் குறைக்க உதவும் இன்டர்செக்ஷன் ஆட்டோ பிரேக், 'டோரிங்' விபத்துக்களைத் தடுக்க உதவும் கதவு திறந்திருக்கும் நிலையை சுட்டிக்காட்டும் எச்சரிக்கை மற்றும் 5 கேமராக்கள், 5 ரேடார்கள் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்களைக் கொண்ட மிகவும் மேம்பட்ட ‘சேஃப் ஸ்பேஸ் டெக்னாலஜி’ போன்ற செயல்திறன் மிக்க பாதுகாப்பு சாதனங்களையும் இது கொண்டுள்ளது.
ஸ்காண்டிநேவிய நாடுகளில் நிலவும் பருவங்கள் மற்றும் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட ஐந்து விதமான சுற்றுப்புற ஒளி அமைப்புகள் மற்றும் ஒலிகள் ஒரு முழுமையான ஆழ்ந்த அனுபவத்தை வாகனப் பயணிகளுக்கு வழங்குகின்றன. புதிய ஹர்மான் கார்டன் சவுண்டுபார் கான்செப்ட், 1040W ஆம்ப்ளிஃபையர் மற்றும் ஒன்பது உயர்-செயல்திறன் கொண்ட ஸ்பீக்கர்களுடன், மெய்மறக்கச் செய்யும் சிறப்பான சரவுண்டு சவுண்டு அனுபவத்தை வழங்குகிறது. உள்ளிணைந்த கூகுள் சேவைகள், 5G இணைப்பு, OTA அப்டேட்கள் மற்றும் பல அம்சங்களுடன் உள்ளுணர்வுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய 12.3 அங்குல உயர்-தெளிவுத்திறன் கொண்ட சென்டர் டிஸ்ப்ளே இதன் தனித்துவ அம்சமாகும். பார்க்கும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் இந்த கார், ஒரு புதிய நேர்த்தியான வடிவமைப்புடன், பல சர்வதேச விருதுகளையும் வென்று உலகளவில் புகழ் பெற்றிருக்கிறது. மதிப்புமிக்க ரெட் டாட் விருது: 2024-ம் ஆண்டின் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, மற்றும் 2024-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நகர்ப்புற கார் ஆகியவை இந்த காருக்கு வழங்கப்பட்டிருக்கும் கௌரவம் மிக்க விருதுகளுள் சிலவாகும்.
EX30 கார், 8-ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் கிடைக்கிறது மற்றும் ஒரு வால் பாக்ஸ் சார்ஜர் ஒரு நிலையான அம்சமாக இதனோடு சேர்த்து வழங்கப்படுகிறது. இந்த கார், அதனுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதத்தையும் மறுவடிவமைப்பு செய்கிறது. NFC (நியர் ஃபிரீக்குவன்சி கார்டு) மூலம், சென்சார் மீது மென்மையாக தட்டுவதன் மூலமே காரைத் திறக்கலாம். கூடுதலாக, வோல்வோ கார் செயலியில் உள்ள டிஜிட்டல் கீ பிளஸ் மூலம், உங்கள் கைபேசியே காரைத் திறக்கும் ஒரு சாவியாக செயல்படுகிறது. இந்த டிஜிட்டல் கீ பிளஸ் வசதியானது மட்டுமல்ல; இது மிகவும் புத்திசாலித்தனமானது, பாதுகாப்பானது மற்றும் வியக்கத்தக்க வகையில் மிக எளிதானது.
மேம்பட்ட எலக்ட்ரிக் டிரைவ்டிரெய்ன் மற்றும் புதுமையான அம்சங்களுடன் வெளிவரும் இந்த மாடல், ஈடு இணையற்ற ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது; அதற்கும் மேலாக, நிலைப்புத்தன்மையுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்குகிறது.








கருத்துகள் இல்லை