சற்று முன்



மிராய் திரை விமர்சனம் ! Review


தமிழ் சினிமா உலகில் அனைத்து மொழி படங்களும் வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையில் நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில்  மிராய் . மற்றும் ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜகபதி பாபு, மனோஜ் மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்  கார்த்திக் கட்டம்னேனி .

கதை ஆரம்பமே

கலிங்கத்து போருக்குப் பின் பேரரசன் அசோகன் மறைத்துச் சென்ற 9 ரகசியப் புத்தகங்கள் – அந்த சக்தியைப் பிடிக்க முயலும் வில்லன் மனோஜ் மஞ்சுவும், அதை காப்பாற்ற களமிறங்கும் நாயகன் தேஜா சஜ்ஜாவும் மையமாகக் கொண்டு, இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி ஒரு பிரமாண்டமான ஃபேண்டஸி படத்தை உருவாக்கியிருக்கிறார்.

நடிப்பு :

தேஜா சஜ்ஜா தனது அதீத சக்திகளை உணராமல் இருப்பவராகவும், பிறகு அதனை வெளிப்படுத்தும் ஹீரோவாகவும் கவர்ந்திருக்கிறார்.

மனோஜ் மஞ்சு வில்லனாகக் கொடுத்த பரபரப்பும், உலகையே ஆள வேண்டும் என்ற அவரது பேராசையும் கதைக்கு எடை சேர்க்கிறது.

ரித்திகா நாயக், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜகபதி பாபு ஆகியோர் தங்கள் பாத்திரத்தில் பொருத்தமாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

கெள்ரா ஹரியின் இசை, குறிப்பாக சண்டைக்காட்சிகளில், பரபரப்பை இன்னும் அதிகரிக்கிறது.

கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு – சில நேரங்களில் கேமரா தானே ஒரு கதாபாத்திரமாகத் தோன்றும் அளவுக்கு பிரமிப்பை தருகிறது.

ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் கலை இயக்கம் – செட்டுகள், காட்சிகள் அனைத்தும் பார்வையாளரை ஒரு மந்திர உலகுக்குள் அழைத்துச் செல்கின்றன.

கிராபிக்ஸ் காட்சிகள் – கோள் ‘மிராய்’, மந்திர புத்தகம், மந்திர ஊர் போன்றவை நம்ப வைக்கும் வகையில் கையாளப்பட்டுள்ளன.

திரைக்கதை & இயக்கம் :

அசோகனின் ரகசியம், கடவுள் ராமர், மந்திர சக்திகள் – இவை அனைத்தையும் ஒன்றாகக் கூட்டி கதை சொல்லும் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது.

ஆன்மீகமும், ஃபேண்டஸியும் கலந்து இருந்தாலும், கதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது.

மணிபாபு கர்ணத்தின் வசனங்கள் படத்தின் மையக் கருத்துகளை அழுத்தமாகச் சொல்கின்றன.

👉 மொத்தத்தில், ‘மிராய்’ என்பது தமிழ்–தெலுங்கு சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒரு மிகப்பெரிய கற்பனைப் பிரமாண்டம்.

Rating : 3 / 5 


Marveltamilnews.com


கருத்துகள் இல்லை