மதராஸி திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி . மற்றும் நடிகை ருக்மணி வசந்த் , வித்யூத் ஜமால் , விக்ராந்த் , சபீர் கல்லரக்கல், பிஜு மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
கதை ஆரம்பமே :
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கும் பயங்கரவாத கும்பலின் திட்டத்தை தடுக்க, பிஜு மேனன் தலைமையிலான தேசிய புலனாய்வு அமைப்பு முயற்சி செய்கிறது. இதற்காக காதல் தோல்வியில் சோகமடைந்து தற்கொலை எண்ணத்துடன் சுற்றி வரும் சிவகார்த்திகேயனை பயன்படுத்துகிறார். ஆனால் அவர் கடந்த 15 ஆண்டுகளாக மனநல சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது. இந்த நிலையில் அவர் உண்மையிலேயே பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்கிறாரா? அவரது மனநிலை பாதிப்பின் பின்னணி என்ன? காதலி ஏன் பிரிந்தார்? என்ற கேள்விகளுக்கான விடையே இப்படத்தின் களம்.
நடிப்பு :
சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களாக கைவிடப்பட்ட மாஸ் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தில் மீண்டும் பிரகாசிக்கிறார். அதிரடி சண்டைகளில் மட்டுமல்லாமல், செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்துகிறார்.
ருக்மணி வசந்த், இரண்டாம் பாதியிலிருந்து கதை நகர்த்தும் முக்கிய பாத்திரமாக திகழ்கிறார்.
வில்லனாக வித்யூத் ஜமால் ஹாலிவுட் ஸ்டைலில் மிரட்டல் காட்டுகிறார்.
சபீர் கல்லரக்கல், பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை வலுவாகச் செய்துள்ளனர்.
தொழில்நுட்பம்:
அனிருத் இசை, குறிப்பாக BGM, படம் முழுவதும் விறுவிறுப்பை கூட்டுகிறது.
சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்தை எட்டியுள்ளது.
ஸ்ரீகர் பிரசாதின் எடிட்டிங், நீளமான படத்தையும் ரஸிக்கும்படி அமைத்துள்ளது.
இயக்கம்:
ஏ.ஆர். முருகதாஸ், துப்பாக்கிக்குப் பிறகு மீண்டும் சமூக பிரச்சனையை கமர்ஷியல் வடிவில் சொல்லியுள்ளார். வலுவான வில்லன், உணர்ச்சி கலந்த ஹீரோ, த்ரில்லிங் திரைக்கதை ஆகியவை படம் முழுவதும் ஈர்க்கின்றன.
ஆக மொத்தத்தில் :
மதராஸி ஒரு பூரண கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர். மாஸ், செண்டிமெண்ட், சமூகப் பதிவு – அனைத்தும் சமநிலையில் கலந்துள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் மாஸ் ரீ-என்ட்ரியும், முருகதாஸின் பக்கா ஸ்கிரீன் பிளேவும் ரசிகர்களை திரையரங்கில் கொண்டாட வைக்கும்.
⭐ ரசிகர்களுக்கான கண்டிப்பான விருந்து !
Rating : 4 / 5

.jpeg)







கருத்துகள் இல்லை