சற்று முன்



பாம் திரை விமர்சனம் ! Review



தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம். மற்றும் நடிகை சிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர், அபிராமி ,பூவையார், சிங்கம் புலி, கிச்சா ரவி, பாலசரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஷால் வெங்கட்.

கதை ஆரம்பமே : 

தீண்டாமை பிரச்சினையின் வேர் தெய்வ நம்பிக்கையிலிருந்து எப்படி உருவாகிறது என்பதை சவாலான கதையில் காட்டுகிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.

காளி வெங்கட் மரணித்த பின், அவரது பிணத்தின் மூலம் தெய்வ சக்தி ஊருக்குள் நுழைகிறது என்ற நம்பிக்கை உருவாக, இரண்டு பிரிவினரும் ஒன்றிணைய வேண்டிய சூழல் உருவாகிறது.

அந்த ஒன்றிணைவுதான் கதையின் மையக் கருத்து.

பலம் :

கதை சொல்லும் விதம்: பகுத்தறிவுக்கு எதிரான கதையாயினும், அதை நிஜமாகவே உணர வைக்கிறார் இயக்குநர்.

நடிப்பு:

காளி வெங்கட் – உயிரோடு சில காட்சிகள், பிறகு முழுக்க “பிணம்” ஆக இருந்தாலும் தாக்கம் அதிகம்.

அர்ஜுன் தாஸ் – குரல், உடல் மொழி, எனர்ஜி அனைத்தையும் அடக்கி வாசித்து, கிளைமாக்ஸில் வெடித்தெழுகிறார்.

சிவாத்மிகா ராஜசேகர் – உயரமும் உடல்வாகும் வசீகரிக்கும், நடிப்பு நயமும் உண்டு.

நாசர் – சதிகார எம்எல்ஏவாக நம்ப வைக்கும் நடிப்பு.

அபிராமி, பூவையார், சிங்கம் புலி, கிச்சா ரவி, பாலசரவணன் உள்ளிட்டோர் அந்த மண்ணின் மக்களாகவே தோன்றுகிறார்கள்.

தொழில்நுட்பம்: பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு, டி. இமானின் இசை – படத்தை நம்பகமாக்கும் முக்கிய பலம்.

குறைகள் : 

அர்ஜுன் தாஸ் – சிவாத்மிகா ராஜசேகர் காதலுக்கு போதுமான இடஒதுக்கீடு இல்லை.

மொத்தத்தில்

தீண்டாமையை சித்தரிக்கும் பல படங்களில் இருந்து பாம் தனித்துவம் பெற்றுள்ளது. “ஒரு பிணம் கூட மக்களை ஒன்றிணைக்க முடியும்” என்ற சிந்தனையை வித்தியாசமான சினிமா மொழியில் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.


Rating : ⭐⭐⭐⭐☆ (4/5)



கருத்துகள் இல்லை