சரீரம் திரை விமர்சனம் ! Review
ஜிவிபி பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜிவி பெருமாள் இயக்கத்தில் தர்ஷன் பிரியன், சார்மி விஜயலட்சுமி, மனோஜ், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “சாரீரம்”.
கதையின் மையம் வழக்கமான காதல் களம் போலத் தோன்றினாலும், இயக்குனர் அதற்குள் வித்தியாசமான திருப்பத்தை கொண்டு வந்திருக்கிறார். நாயகன்–நாயகி காதல், அதற்கு தந்தையின் எதிர்ப்பு, மரணம், பிரிவு ஆகிய சினிமாவில் வழக்கமான அம்சங்கள். ஆனால் இருவரும் பிழைத்துக் கொள்ள எடுக்கும் முடிவு தான் படத்தின் புதுமை.
சிறப்பு:
நாயகன் தர்ஷன் பிரியன் அறிமுகம் என்றாலும் நடிப்பு, நடனம், சண்டை காட்சிகளில் கச்சிதமாக நடித்துள்ளார்.
நாயகி சார்மி விஜயலட்சுமி அழகோடும், கண்களில் தெரியும் வலியோடும் கவனம் ஈர்க்கிறார்.
ஷகிலா மருத்துவராக வித்தியாசமான வேடத்தில்.
துணை நடிகர்கள் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.
முக்கிய திருப்பம்:
காதலுக்காக பல தியாகங்கள் சினிமாவில் நடந்திருக்கிறது. ஆனால், இங்கே காதலர்களே பாலினம் மாறிக்கொண்டு ஒருவரை ஒருவர் மணம் முடிக்கின்றனர். இது தமிழ்ச் சினிமாவில் முதல் முறையாகக் கூறப்படும் தைரியமான கதை.
சந்தேகம்:
இப்படி பாலினம் மாறிக்கொண்ட காதலர்கள் திருமணத்திற்குப் பின் குழந்தையும் பெறுகின்றனர். அதற்குப் பின் அவர்கள் ஏன் திருநங்கையாக வாழ்கின்றனர் என்பது கதையில் ஒரு குழப்பமாகத் தோன்றுகிறது.
மொத்தத்தில்:
சாரீரம் ஒரு பரிட்சயமான காதல் கதைக்கு அதிர்ச்சி தரும் வித்தியாசமான தீர்வை சொல்கிறது. கதை சொல்லும் தைரியம் பாராட்டத்தக்கது. ஆனால், சில தர்க்க ரீதியான குழப்பங்கள் கேள்விக்குறியாகவே நிற்கின்றன.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை