சற்று முன்



பல்டி திரை விமர்சனம் ! Review



கபடியை வாழ்க்கை கனவாகக் கொண்ட இளைஞர்கள், கந்து வட்டி மாஃபியாவின் வலையில் சிக்கி எப்படிப் போராடுகிறார்கள் என்பதையே பல்டி சொல்லுகிறது.

நடிப்பு :

ஷேன் நிகம் கபடி வீரனுக்கான உடல்மொழியை நம்பவைக்கும்படி வெளிப்படுத்தியிருக்கிறார். போட்டி காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அவரது வேகம் சிறப்பாகத் தெரிகிறது.

சாந்தனு, நண்பனாகவும், குழப்பமான பாத்திரமாகவும் தனது நடிப்பால் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக வந்திருக்கும் செல்வராகவன், மென்மையான பேச்சு வழியாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பது படத்துக்கு ஒரு புதிய பரிமாணம்.

அல்போன்ஸ் புத்திரன் வில்லனாக சுவாரஸ்யமாக இருந்தாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைவு.

ப்ரீத்தி அஸ்ரானி, ஹீரோயினுக்கான பங்கினை சரியாக செய்திருக்கிறார்.

தொழில்நுட்பம்:

சாய் அபயங்கரின் பாடல்கள் இனிமையாக இருக்க, பின்புல இசை காட்சிகளுக்கு வேகமும் உயிரும் கொடுத்திருக்கிறது.

அலெக்ஸ் ஜெ. புலிக்கலின் ஒளிப்பதிவு, குறிப்பாக கபடி போட்டி மற்றும் சண்டை காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது.

எடிட்டர் சிவகுமார் வி. பனிக்கரின் கட் சண்டை காட்சிகளில் வேகத்தை கூட்டினாலும், சில காட்சிகளின் நீளம் சோர்வடையச் செய்கிறது.

இயக்கம் :

உன்னி சிவலிங்கம் பல படங்களின் தாக்கம் தென்பட்டாலும், கதையை வேகமாக நகர்த்தி, முழுமையான கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக்கியிருக்கிறார்.

கபடி அணிகளுக்கு கொடுத்த பெயர்கள், மலையாளப் பாடல் மூலமாக அரசியல் சுட்டிக்காட்டிய விதம் படத்திற்கு கூடுதல் ஆர்வம் சேர்க்கிறது.

மொத்தம்:

புதிதாக ஒன்றும் தராதாலும், வேகமான திரைக்கதை, ஆற்றல் மிக்க நடிப்பு, உற்சாகமான தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாக பல்டி ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் ஆக்‌ஷன் அனுபவத்தைத் தருகிறது.

Rating : 3 /



கருத்துகள் இல்லை