தண்டகாரண்யம் திரை விமர்சனம் ! Review
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான தினேஷ் மற்றும் கலையரசன் நடிப்பில் தண்டகாரண்யம் .
இயக்குனர் அதியன் ஆதிரை உருவாக்கிய தண்டகாரண்யம், பழங்குடியின மக்களின் உண்மை வாழ்க்கை வலிகளையும், ஆட்சியாளர்கள் அவர்கள்மீது சுமத்திவிட்ட “தீவிரவாதி” என்ற முத்திரையையும் சவாலாக கேள்வி கேட்கும் துணிச்சலான திரைப்படம்.
கதை:
தினேஷ்–கலையரசன் எனும் சகோதரர்கள் மூலம், அரசாங்கத்தின் பெயரில் நடத்தப்படும் ஏமாற்றங்கள், வேலைவாய்ப்புக்காக போராடும் எளிய மக்களின் துயரங்கள், நக்சலைட்டுகள் என்று அடையாளம் குத்தப்பட்ட பழங்குடியினரின் வாழ்வியல் என பல்வேறு பரிமாணங்களை படம் சித்தரிக்கிறது.
நடிப்பு:
தினேஷ் அமைதியான முறையில் எதிர்த்து, பின்னர் வெடிக்கும் விஸ்வரூபம் பார்வையாளரை மெய்சிலிர்க்க வைக்கிறது. கலையரசனின் பயம், பதற்றம், தப்பிக்க முயற்சி – அனைத்தும் நிஜமாகவே படத்தில் உயிர்ப்படைத்திருக்கிறது. துணை நடிகர்களும் கதாபாத்திரங்களாகவே மனதில் பதிந்திருக்கிறார்கள்.
இசை & தொழில்நுட்பம்:
ஜஸ்டின் பிரபாகரனின் இசை மிகப்பெரிய பலம். “காவக்காடே” போன்ற பாடல்கள் கதை உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கின்றன. பழைய பாடல்களை சரியான தருணங்களில் பயன்படுத்திய விதமும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா, வனப்பகுதியின் அழகையும் வலியையும் சேர்த்து காட்சிப்படுத்தியுள்ளார். தொகுப்பு மற்றும் காட்சிநடையைச் செல்வா.ஆர்.கே சீரான ஓட்டத்தில் அமைத்துள்ளார்.
இயக்கம்:
அதியன் ஆதிரை, இதுவரை பேசப்படாத உண்மையை, உணர்ச்சியுடனும் தீவிரத்துடனும் திரைக்கு கொண்டுவந்துள்ளார். வலியோரின் மோசடியில் சிக்கிய எளியவர்கள் தான் “போராளிகள்” ஆகிறார்கள் என்பதை சக்திவாய்ந்த முறையில் சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில்:
தண்டகாரண்யம் என்பது சாதாரண ஒரு படம் அல்ல; அது சமூக அரசியல் சிந்தனையை கிளறும் வலிமையான படைப்பு. உண்மையை உரக்கச் சொல்லும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலகத்தை தாண்டி இந்திய திரையுலகில் பெரும் கவனம் பெறும் ஒரு படைப்பாக திகழ்கிறது.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை