சற்று முன்



காந்தி கண்ணாடி திரை விமர்சனம் ! Review

தமிழ் சினிமா உலகில் சின்னத்திரையின் நாயகன் இன்று வெள்ளித்திரையில் அறிமுகமாகும்  பாலா நடிப்பில் காந்தி கண்ணாடி . நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல் , அர்ச்சனா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை  இயக்கியுள்ளார் இயக்குனர் ஷெரிப் .

கதை ஆரம்பமே

ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பாலாஜி சக்திவேல் (Balaji Sakthivel) தனது காதலான மனைவி அர்ச்சனாவுடன் (Archana) 60 வயதிலும் அதே காதல் பாசத்துடன் வாழ்கிறார். குழந்தை இல்லை என்றாலும், இருவருக்குமான அன்பு மாறாமல் தொடர்கிறது. அர்ச்சனாவின் ஆசைப்படி 60வது கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த விரும்பும் பாலாஜி, நிகழ்ச்சி வடிவமைப்பாளரான பாலாவை (Bala) அணுகுகிறார். ஆனால், அரசு அறிவிப்பால் பணம் செல்லாமல் போக, அந்தக் கல்யாணம் நடக்குமா இல்லையா என்பது கதை.

நடிப்பு:

பாலா – முதல் படமென்றாலும், நடிப்பு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியது தெரிகிறது. காமெடியில் முயற்சி தெரிகிறது.

பாலாஜி சக்திவேல் – உணர்ச்சி பூர்வமாக கதையை சுமந்துள்ளார். சில இடங்களில் ஓவர் ஆகினாலும் மனதை கவர்கிறார்.

அர்ச்சனா – அனுபவம் மிக்க நடிப்பு, கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம்.

நமிதா கிருஷ்ணமூர்த்தி – தன் வேலையை நன்றாக செய்துள்ளார்.

மற்ற நடிகர்கள் – திரைக்கதைக்கு ஏற்றபடி பங்களித்துள்ளனர்.

தொழில்நுட்பம்:

ஒளிப்பதிவு (Balaji K. Raja) – லைவ் லொக்கேஷன்களில் அழகான காட்சிகள், குறிப்பாக இரவு மற்றும் கோவில் காட்சிகள் சிறப்பு.

இசை (Vivek–Mervin) – பாடல்கள் கேட்கும் வகையில், BGM காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

எடிட்டிங் (Sivanandeeswaran) – சுமாரான கதை, ஆனால் எடிட்டிங் மூலம் சுவாரஸ்யம் கொடுக்க முயற்சி.

இயக்கம் (Sheriff):

இளமையிலும் முதுமையிலும் ஒரே மாதிரி தொடரும் காதல்தான் உண்மையான காதல் என்ற நல்ல கருத்தை சொல்ல முயற்சி. ஆனால் சுவாரஸ்யம் குறைவால் படம் சில இடங்களில் மெதுவாகிறது.

மொத்தத்தில்:

‘காந்தி கண்ணாடி’ – மெதுவாக போனாலும், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு உணர்ச்சிப் பூர்வமான படம்.

Rating  : ⭐⭐⭐ (3/5)



கருத்துகள் இல்லை