சற்று முன்



காயல் திரை விமர்சனம் ! Review



தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகரான லிங்கேஷ் நடிப்பில் காயல். மற்றும் நடிகை காயத்ரி, அனுமோல் , ஐசக் , ரமேஷ் திலக், ஸ்வாகதா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தமயந்தி.

கதை ஆரம்பமே :

 மகளின் காதலை தந்தை ஏற்றுக்கொள்ள சாதி காரணமாக தாய் அனுமோல் மறுக்க, காயத்ரி தற்கொலை செய்கிறாள். இதனால் பெற்றோருக்குள் பிரிவு ஏற்படுகிறது. மகன் திரும்பி வந்து குடும்பத்தை இணைக்க முயற்சிக்கிறான். இந்த பயணத்தில், காயத்ரியின் காதலன் லிங்கேஷுடன் சந்திப்பது கதைக்கு திருப்பமாகிறது.

நடிப்பு :

லிங்கேஷ் – காதலியின் இழப்பால் வலிக்கும் இளைஞராக நன்றாக நடித்துள்ளார்.

அனுமோல் – ஐசக் – தம்பதிகளின் கருத்து மோதலை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

காயத்ரி – தைரியமான கேரக்டராக பிரவேசித்துள்ளார்.

ரமேஷ் திலக் – தனது குடும்ப பிரச்சினையில் சிக்கிய மனிதனாக நிஜத்தன்மையுடன் நடித்துள்ளார்.

ஸ்வாகதா – நாயகனுக்கு வண்ணம் சேர்க்கும் விதத்தில் நடித்துள்ளார்.

டெக்னீசியன்ஸ்:

இசை – ஜஸ்டின் கெனன்யா: இனிமையான பாடல்கள், நல்ல வரிகள்.

ஒளிப்பதிவு – கார்த்திக்: இயல்பான காட்சிகளை அழகாக பிடித்துள்ளார்.

இயக்கம்

 தமயந்தி: தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சாதி வன்முறையை பெண்களின் பார்வையில் சித்தரித்திருக்கிறார்.

மொத்தத்தில்:

காயல் – குடும்பம், சாதி, காதல் மோதல்களை பேசும் மெதுவான குடும்ப-டிராமா. சில இடங்களில் நீளமாக இருந்தாலும், சமூகச் செய்தியுடன் வந்திருப்பது சிறப்பு.

“சாதி எதிர்ப்பு, குடும்ப பாசம், காதல்” மூன்றையும் இணைத்துப் பேசும் மென்மையான படம்.

Rating : 3 / 5 

marveltamilnews.com


கருத்துகள் இல்லை