சற்று முன்



உலக அளவில் அப்போலோவின் 500 ஆவது மருத்துவமனை வேளச்சேரியில் உதயம். !

 

உலக அளவில் அப்போலோவின் 500 ஆவது மருத்துவமனை வேளச்சேரியில் உதயம். ! 

சென்னையில் இது 30 ஆவது கிளை.

-வேளச்சேரியில் அப்போலோ கிளினிக்கை மருத்துவர்.சங்கீதா ரெட்டி, திருமதி சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் திறந்தனர்.

-இதய நல பரிசோதனைத் திட்டம் அறிமுகம்.

- தரமான மருத்துவ சேவையை வழங்கும் சேவை தொடர்கிறது…புதிய அப்போலோ மருத்துவமனைகள் மூலம்!

வழங்கப்படும் சேவைகள்:

- மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைகள்

-பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் சேவைகள்

-தடுப்பூசிகள்

- பல் மருத்துவ சேவைகள்

- ஒட்டுமொத்த முழு உடல் பரிசோதனை

சிறப்பு மருத்துவ சேவைகள்

இங்கு 22 மருத்துவர்கள், பயிற்சிபெற்ற ஊழியர்கள் உண்டு. இங்குள்ள சிறப்புத் துறைகள்:

● மகளிர் மருத்துவம்

● காது, மூக்கு, தொண்டை

● குழந்தைகள் மருத்துவம்

● மனநோயியல்

● எலும்பு சிகிச்சைகள்

● நுரையீரல் தொடர்பான துறை

● ...மேலும் இதர சிறப்புத்துறைகள்

சென்னை, 6 அக்டோபர்,2025: நாட்டின் முன்னணி பன்னோக்கு சங்கிலித்தொடர் மருத்துவமனைகளுள் ஒன்றான அப்போலோ கிளினிக், சென்னையின் பரபரப்புமிகு பகுதியான வேளச்சேரியில் புதிய கிளையைத் திறந்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்திக்கொண்டுள்ளது. நவீனமான, பல துறைகளை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்ட இம்மருத்துவமனை, ஒரு முழுமையான மருத்துவத் தீர்வளிக்கும் இடமாக அமையவிருக்கிறது. இங்கு வல்லுநர்களின் ஆலோசனைகள், பரிசோதனைகள், நோய்த்தடுப்பு மருத்துவப் பரிசோதனைகள், மருந்தகம் என்று எல்லாமே ஒரே கூரையின்கீழ் இடம்பெற்றிருக்கின்றன.

மருத்துவ வல்லுநர்கள், அதி நவீன தொழில்நுட்பம், பயிற்சிபெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வேளச்சேரி அப்போலோ மருத்துவமனை, உண்மையிலேயே மிகச்சிறப்பான மருத்துவ சேவை மையமாக உருவெடுத்திருக்கிறது.

வேளச்சேரியில் அமைந்திருக்கும் புதிய மருத்துவமனை மூன்று தளங்களுடன் 4000 சதுர அடி பரப்பில் நவீன மருத்துவ வசதிகளுடன் பரந்துவிரிந்திருக்கிறது. இது, விசாலமான முறையில் அதிநவீன மருத்துவ சேவைகளை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்ற அப்போலோவின் நோக்கத்தைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. வேளச்சேரி மருத்துவமனை, சென்னையில் அப்போலோவின் 30 ஆவது கிளை ஆகும். உலக அளவில் 500 ஆவது கிளையும் (துபாய், பங்களாதேஷ் நாடுகளில் உள்ள மருத்துவமனைகள் உட்பட) இதுவாகும். இப்பரந்துபட்ட கிளைகளின்மூலமாக அப்போலோ மருத்துவமனைகள் தினமும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிறு காயங்கள்முதல் எளிய-வெளி நோயாளர் சிகிச்சைவரை அளித்து வருகின்றன. நாடு முழுவதிலுமுள்ள 3500க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த மருத்துவர்கள்மூலம் இது சாத்தியப்படுத்தப்படுகிறது.

அப்போலோவின் வேளச்சேரி மருத்துவமனை திறப்பு விழாவில் பேசிய அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் மருத்துவர்.சங்கீதா ரெட்டி பேசுகையில், “இந்தியாவில் தொற்றா நோய்களால்தான் அதிக அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதாவது, 65% இறப்புகள் இவ்வாறுதான் நேரிடுகின்றன. இதனை உணர்ந்த நாங்கள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான தேவையை முழுமையாகப் புரிந்துகொண்டோம். தொற்றா நோய்களிலிருந்து நம்மைக் காக்க, துல்லியமான நோய்த்தடுப்பு வியூகம் மற்றும் மேலாண்மை அவசியம் என்பதை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. ஒருங்கிணைந்த, நோயாளிகளை மையமாகக் கொண்ட, உயர்தரமான, எளிதில் கிடைக்கக்கூடிய, நியாயமான கட்டணத்துடன் கூடிய மருத்துவ சேவையை சென்னையில் வழங்குவதே எமது நோக்கம் ஆகும். இப்புதிய மருத்துவமனை, அதனை நனவாக்கியுள்ளது. அப்போலோ ப்ரோ ஹெல்த் புரொகிராம் எனும் திட்டத்தின்கீழ் நாங்கள் நோய்த்தடுப்பு பரிசோதனைகள், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரின் உடல் நல இடர் மதிப்பீடு (pHRA) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் ஒவ்வொரு நோயாளியும் சிறப்பான முறையில் கண்காணிக்கப்பட்டு அந்நபரின் உடல் நலம் நிர்வகிக்கப்படுகிறது” என்றார்.

அப்போலோ மருத்துவமனை, எப்போதும் நோய்த்தடுப்பு மருத்துவத்தில் முன்னோடியாகத் திகழ்ந்துவருகிறது. மேலும் இதய பாதுகாப்புத் துறையிலும் முன்னணி இடத்தை வகித்துவருகிறது. தற்போது புதிய மருத்துவ மையத்தைத் திறந்ததன் மூலமாக இதய நலன் தொடர்பான முன்னெடுப்பையும் இங்கே தொடங்கியிருக்கிறது. அதன்படி இதய அடைப்புகளைக் கண்டறியும் பரிசோதனை திட்டம் இங்கு அறிமுகமாகிறது. எல்.பி-பி.எல்.ஏ2 (பி.எல்.ஏ.சி) எனும் அதிநவீன பரிசோதனைமுறை, நோயாளிகளின் தமனிகளில் உள்ள கொழுப்பு படிமங்களின் அபாயத்தைக் கண்டறியும் முறையாகும் (atherosclerosis). இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையும் ஆகும்.

மருத்துவத்துறையின் நிபுணத்துவத்தை மக்களிடையே கொண்டுபோய் சேர்ப்பது எனும் எமது எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் வேளச்சேரி மருத்துவமனை உதயமாகியிருக்கிறது. இப்பிராந்தியத்தில் தரமான மருத்துவ சேவை எல்லா குடும்பங்களுக்கும் எளிதில் கிடைப்பதை சாத்தியமாக்கும் பணியில் அப்போலோ ஈடுபட்டுவருகிறது. புதிய மருத்துவமனைகளில் நேரத்தை முன்பதிவு செய்துகொள்ள அப்போலோ கிளினிக்கின் இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1860-500-7788 -ஐத் தொடர்பு கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை