சற்று முன்



வேடுவன் விமர்சனம் ! Review



நடிகர் கண்ணா ரவியை மையமாகக் கொண்டு உருவான ‘வேடுவன்’ தொடர், ஒரு உண்மை சம்பவத்தை சினிமா வடிவில் சொல்லும் வித்தியாசமான முயற்சி. கதாபாத்திரங்களில் ஆழமாக இணைந்து வாழும் நடிகராக கண்ணா ரவி, போலீஸ், பிச்சைக்காரர், சமையல்காரர் என பல வேடங்களில் மாறி அசத்துகிறார். குறிப்பாக கடமைக்கும் மனசாட்சிக்கும் இடையே குழம்பும் தருணங்களில் அவர் காட்டிய நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

சஞ்சீவ் தனது அனுபவமிக்க நடிப்பால் தாதா கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா ஆகியோரின் நடிப்பும் தொடருக்கு பலம் சேர்க்கிறது.

தொழில்நுட்ப ரீதியாக ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னணி இசை, சூரஜ் கவியின் எடிட்டிங் ஆகியவை தொடரை உயர்த்துகின்றன.

இயக்குநர் பவன் குமார், சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சியை சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு எபிசோடும் “அடுத்து என்ன?” என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார். சில இடங்களில் காட்சியமைப்பு தொலைக்காட்சி பாணியில் இருந்தாலும், கதை, நடிப்பு, திருப்பங்கள் ஆகியவை அந்த குறையை மறைத்து தொடரை சிறப்பாக உயர்த்துகின்றன.

மொத்தத்தில்

 ‘வேடுவன்’ — வித்தியாசமான கதை, நுணுக்கமான நடிப்பு, விறுவிறுப்பான திருப்பங்களுடன் கூடிய சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடர். 

Rating : ⭐⭐⭐⭐☆ / 5 


கருத்துகள் இல்லை