கேம் ஆஃப் லோன்ஸ் திரை விமர்சனம் ! Review
நடிப்பு: நிவாஸ் ஆதித்தன், அபிநய், ஆத்விக், எஸ்தர்
இயக்கம்: அபிஷேக் லெஸ்ஸி
இசை: ஜோ கோஸ்டா
தயாரிப்பு: JRG Productions – என்.ஜீவநந்தம்.
கதை ஆரம்பமே :
ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி கடன் வாங்கும் நாயகன் எதிர்கொள்ளும் மன அழுத்தம், அதிர்ச்சி, மர்மம் ஆகியவை இணைந்த சைக்காலாஜிகல் திரில்லராக ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ உருவாகியுள்ளது.
நிவாஸ் ஆதித்தன் தனது உணர்ச்சிப் பூர்வமான நடிப்பால் கதையை தாங்கியுள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் காட்சிகளிலும் பார்வையாளரை கவரும் அளவில் எக்ஸ்பிரஷன்களால் ஆட்டம் காட்டியுள்ளார். அபிநய் தனது ஸ்டைலிஷ் தோற்றத்தால் கவனம் ஈர்க்கிறார். ஆத்விக் மற்றும் எஸ்தர் தங்களது சிறிய கதாபாத்திரங்களிலும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜோ கோஸ்டாவின் பின்னணி இசை படத்தின் பதற்றத்தையும் திகைப்பையும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் சபரியின் சிறிய இடத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திய காட்சிகள் பாராட்டத்தக்கவை. தொகுப்பாளர் பிரதீப் படத்தைத் தொய்வின்றி நகர்த்தியுள்ளார்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த திரைக்கதை, “கடன் தற்கொலைகளின் பின்னணியில் மர்மம் இருக்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்புகிறது. இயக்குநர் அபிஷேக் லெஸ்ஸி அதிர்ச்சிகரமான கற்பனைக்குள் சமூக யதார்த்தத்தை இணைத்து மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார்.
முடிவுரை :
🎯 ‘கேம் ஆஃப் லோன்ஸ்’ — எளிதில் கடன் கொடுக்கும் ஆன்லைன் உலகின் அபாயத்தை வெளிப்படுத்தும், மனதை கவரும் சைக்காலாஜிகல் திரில்லர்.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை