காந்தாரா திரை விமர்சனம் ! Review
பழங்குடியினரின் வளமான காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற முயலும் அரசருக்கும், அதை பாதுகாக்கும் ரிஷப் ஷெட்டிக்கும் இடையே நடக்கும் மோதலே படத்தின் மையக்கரு.
நடிப்பு :
ரிஷப் ஷெட்டி தனது கதாபாத்திரத்தில் இயல்பாகவே பிரவேசித்து, சாமியாட்டக் காட்சிகளில் கண்கள், உடல் மொழி மூலம் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ருக்மணி வசந்த் அழகும், திடீர் வலிமையும் காட்டும் வேடத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார்.
ஜெயராம், குல்ஷன் தேவய்யா ஆகியோரின் அரச குடும்பக் கதாபாத்திரங்கள் சரியான தேர்வு.
தொழில்நுட்பம் :
பி. அஜனீஸ் லோக்நாத் இசை படத்திற்கு பெரும் பலம். குறிப்பாக பின்னணி இசை படத்தை காப்பாற்றும் அளவுக்கு வேலை செய்திருக்கிறது.
அரவிந்த் கே. காஷ்யப் ஒளிப்பதிவு பிரமாண்ட visuals-ஐ தந்திருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் கதையோடு கலந்து ஓடியிருப்பது சிறப்பு.
தொகுப்பில் சுருக்கம் இருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
இயக்கம் :
ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆன்மீகம், காட்சி பிரமாண்டம், சண்டைக் காட்சிகள் இருப்பினும், முதல் காந்தாராவில் இருந்த உணர்வுப்பூர்வமான தாக்கம் குறைவாகவே உணரப்படுகிறது. நீளமான திரைக்கதை, பழைய பாணி காட்சிகள், சுவாரஸ்யமற்ற screenplay படத்தை சற்றே பலவீனப்படுத்துகிறது.
முடிவு :
பிரமாண்ட visuals, BGM, action காட்சிகள் ரசிக்க வைத்தாலும், சுவாரஸ்யம் குறைந்த கதை, நீளம் ஆகியவை காந்தாராவை எதிர்பார்த்த அளவுக்கு உயர்த்தவில்லை.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை