சற்று முன்



கும்கி 2 திரை விமர்சனம் ! Review



மலைக் கிராமத்தில் வாழும் மதி மற்றும் குட்டி யானை இடையே உருவாகும் அன்பும் பாசமும் தான் கும்கி 2-இன் மையக் கரு. சிறு வயதில் காப்பாற்றிய யானை, மதியின் வாழ்க்கை துணையாகிப் போவது முதல் திடீரென அது மாயமாகி விடும் தருணம் வரை படம் உணர்ச்சிகளை நுட்பமாக எடுத்துக் காட்டுகிறது. யானையை தேடும் மதியின் பயணமே முழு படத்தையும் தாங்கிச் செல்கிறது.

அறிமுக நாயகன் மதி – தனக்கு மிகைக்க முடியாத பாசப் பிரிவு ஏற்படும் போது மனம் உடைந்து தவிப்பது, யானையை பாதுகாக்கும் போது காட்டும் ஆவேசம், நினைவிழக்கும் அளவுக்கு அதன் மீது கொண்ட பற்றுதல் – அனைத்தையும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படமே என்றாலும் நடிப்பில் நம்பிக்கை ஊட்டுகிறார்.

நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான வேலையை அழகாக செய்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையில் வரும் மெலோடி பாடல்கள் படத்தின் உணர்வோட்டத்துக்கு பெரிய பலமாக உள்ளது. புவனின் எடிட்டிங் காட்சிகளை நயமாகச் சேர்க்கிறது. சுகுமார் ஒளிப்பதிவு மலை, அருவி, இயற்கையின் அழகை கண்களுக்கு சந்தோஷம் தரும் அளவுக்கு காட்டுகிறது.

பிரபு சாலமன் பாணியில் வனம் – யானை – மனித உணர்ச்சிகள் என்ற உணர்ச்சி வட்டம் மீண்டும் வந்தாலும், குட்டி யானையின் நட்பு காட்சிகள், யானையை மையமாக வைத்து படமாக்கிய சாகசக் காட்சிகள், சில வனப்பகுதி காட்சிகள் என படத்தை ரசிக்க வைக்கும் பொழுதுகள் ஏராளம்.

மொத்தத்தில்

கதை மிகப் புதிதல்ல என்றாலும்,

நாயகன் – யானை பாசம், இசை, இயற்கை காட்சிகள், உணர்ச்சி நெருக்கமான தருணங்கள் ஆகியவை கும்கி 2-ஐ குடும்பம் முழுக்க ரசிக்கக்கூடிய அழகான இயற்கை, பாசம், உணர்ச்சி பயணப்படமாக மாற்றுகின்றன.

Rating : 3 /


கருத்துகள் இல்லை