ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை: டைட்டன் ஸ்மார்ட் இவோக் 2.0 ஐ [Titan Smart Unveils Evoke 2.0] !
ஸ்மார்ட்வாட்ச் இதற்கு முன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை: டைட்டன் ஸ்மார்ட் இவோக் 2.0 ஐ [Titan Smart Unveils Evoke 2.0] நவீன ஃபேஷனையும் ஸ்மார்ட் தொழில்நுட்பத் துல்லியத்தையும் ஒருசேர வழங்கும் ப்ரிமீயம் ஸ்மார்ட் வாட்ச்சாக அறிமுகமாகிறது !
சென்னை, டைட்டன் ஸ்மார்ட், தனது பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு வரிசையில் சமீபத்திய மேம்பட்ட மாடலான இவோக் 2.0 [Evoke 2.0]-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதுமையான தொழில்நுட்பத்தையும் மற்றும் கூரிய விளிம்புகளுடன் கூடிய நவீன வடிவமைப்பையும் (sharp-edgy design) ஒருசேர சங்கமிக்கும் வகையில் இவோக் 2.0 ப்ரிமீயம் ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம், தனது பல்வேறுபட்ட கைக்கடிகாரங்கள் தயாரிப்பில் பயன்படுத்தியுள்ள கைவினைத்திறன் (craftsmanship) மற்றும் வடிவமைப்பு நிபுணவத்தின் (design intelligence) திறனை அடிப்படையாகக் கொண்டு, இவோக் 2.0 மாடலை உருவாக்கியுள்ளது. இது, இந்நிறுவனத்தின் “ஃபேஷனை பூர்த்தி செய்யும் பேரார்வம்” (passion meets fashion) என்ற தத்துவத்திற்கு உயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. டைட்டன் நிறுவனத்தின் பாரம்பரிய கைக்கடிகார நுட்பமான அனலாக் (analogue) கடிகாரத் தயாரிப்பின் கைவினைத்திறனையும், வளர்ந்து வரும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தையும் (modern evolving tech) ஒருசேர பயன்படுத்தி, இந்த ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இது ஒரு கடிகாரத்தின் செயல்பாட்டைக் காட்டிலும் கூடுதலாக, ஒருவரின் தனிப்பட்ட பண்பு, நலன்கள் மற்றும் வாழ்க்கை முறையின் பிரதிபலிப்பாக அமைகிறது.
ஒரு ஸ்மார்ட்வாட்ச் அணிவதன் நோக்கத்தையே மறுவரையறுக்கும் வகையில் இவோக்2.0 அமைந்துள்ளது. இது மணிக்கட்டின் ஒவ்வொரு அங்கத்திற்கும் பொருந்துமாறும்,அனைத்து விதமான மனநிலைகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளுக்கு ஏற்றவாறும், அனைத்து விதமான உடைகளுக்கும் பொருந்தும் அணிகலனாக தன்னை மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தனித்துவமான பொருத்தத்தையும் (bespoke fit), மிகுந்த அழகியலையும் (elevated aesthetics), மற்றும் ஒரு தனித்துவமான ஸ்மார்ட் தொழில்நுட்ப பயன்பாடுகளையும் (intelligent core) வழங்குகிறது. நவீன நேர்த்தியுடன் (contemporary elegance) சிறந்த செயல்திறனை (performance) இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ப்ரீமியம் கைக்கடிகாரத்தின் நுட்பமான தோற்றத்தைக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், தற்காலத்திய அணியக்கூடிய தொழில்நுட்பத்திடம் (wearable technology) இருந்து எதிர்பார்க்கப்படும் பயன்படுத்த எளிதான அறிவார்ந்த பயன்பாட்டு முறைகளை (intuitive intelligence) இது வழங்குகிறது. தனது ஃபேஷனில் அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் நவீன அம்சங்கள் (fashion-forward sensibility) மற்றும் துல்லியமாக்கப்பட்டவடிவமைப்புடன் கூடிய (refined design), இவோக் 2.0 மாடலானது “ஸ்மார்ட்வாட்ச் இதற்குமுன் இவ்வளவு அழகாக இருந்ததில்லை” [Smart Never Looked This Goo] என்ற கருப்பொருளுக்கு உண்மையான சான்றாக விளங்குகிறது.
வடிவமைப்பு மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் விருப்பத் தேர்வுகளை வழங்குவதில் ஒரு மேம்பட்ட சிந்தனை- இவோக் 2.0 அளிக்கும் முக்கிய அம்சங்கள்
• பிரீமியம் மெட்டல் கேஸ் (Premium Metal Case):
43 மிமீ வட்டவடிவ மெட்டல் கேஸ் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
• ஒளிரும் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே (Brilliant Super AMOLED Display):
1.32” அங்குல திரை, 466x466 தெளிவுத்திறன் (resolution) மற்றும் 1000 நிட்ஸ் (nits) வரையிலான பிரகாசம் ஆகியவற்றுடன், அதிக வெளிச்சம் நிறைந்த வெளிப்புறச் சூழல்களிலும் கூட பார்வைக்கு ஏற்ற நுண்ணிய விவரங்களுடன், தெளிவானகாட்சியை உறுதி செய்கிறது.
• அணிவதற்கு ஏற்ற இலகுவான & நேர்த்தியான வடிவமைப்பு (Lightweight & Sleek Fit):
11 மிமீ மெல்லிய உடல்பகுதி, நாள் முழுவதும் அணிவதற்கு வசதியாகவும், அனைத்து மணிக்கட்டு அளவுகள் மற்றும் ஸ்டைல் விருப்பங்களுக்குப் பொருந்துமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
• பல வகைப்படுத்தப்பட்ட கைப்பட்டை வடிவமைப்பு (Versatile Strap Design):
டூயல்-டோன் மேக்னடிக் ஸ்ட்ராப் (Dual-tone magnetic strap), ஒரு நேர்த்தியான மற்றும் கச்சிதமான பொருத்தத்தை வழங்குகிறது.
• ரோட்டரி கிரவுன் & தனிநபருக்கு ஏற்ற வகையிலான பட்டன்கள் (Rotary Crown & Custom Buttons): பயன்படுத்த எளிதான கட்டுப்பாடுகள் (tactile controls), ஒவ்வொரு திருப்பங்களுக்கும் அறிவுறுத்தும் வழிகாட்டும் வசதி (smooth navigation) போன்றவை முக்கிய அம்சங்களை விரைவாக அணுகுவதற்கும் உதவுகின்றன.
• மேம்பட்ட பிராசஸர் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமையான இயங்குதளம் (Advanced Processor with Fluidic UI):
இது தடையற்ற, தாமதமில்லாத (lag-free) அனுபவத்தை உறுதிசெய்கிறது, மேலும் செயலிகள் முழுவதும் சீரான உபயோகத்திற்கு (fluidic interaction) வழிவகுக்கிறது.
• 3டி டைனமிக் வாட்ச் ஃபேஸ்கள் (3D Dynamic Watch Faces):
மிகவும் நுண்ணிய விவரங்களுடன் (motion & depth) ஈர்க்கக்கூடிய காட்சிகளை வழங்குவதோடு, ஸ்டைலை எளிதாக விருப்பத்திற்கேற்றார் போல மாற்றியமைக்க (style personalization) வழிவகுக்கிறது.
• ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைந்த செயலி அனுபவம் (Integrated Health & App Experience):
ஆண்ட்ராய்ட் (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) இயங்குதளங்களில் உள்ள டைட்டன் ஸ்மார்ட் ஆப் (Titan Smart App) உடன் எந்தவிதமான தடைகள், இடையூறுகளும் இல்லாமல் ஒருங்கிணைத்து செயல்பட வைக்கிறது. இது 24x7 இதயத்துடிப்புக் கண்காணிப்பு (heart-rate monitoring), உடலில் ஆக்ஸிஜன் அளவைக் கண்டறியும் SpO₂ கண்காணிப்பு, நம்முடைய உறக்க நிலை பற்றிய விரிவான பகுப்பாய்வு (sleep analysis), அன்றாடம் நம்முடைய செயல்திறன் சார்ந்த தரவு (performance data) மற்றும் ஆரோக்கியம் சார்ந்து வழிகாட்டப்படும் தகவல்களை (guided wellness insights) வழங்கி, ஒரு முழுமையான, நபருக்கேற்றபடியாக்கப்பட்ட உடல்நலம் சார்ந்த அனுபவத்தை அளிக்கிறது.
இந்த அறிமுகம் குறித்து, டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திலான பயன்பாட்டு அணிகலன்கள் (Smart Wearables) பிரிவின் வணிகத் தலைவரான திரு. சீனிவாசன் கிருஷ்ணமூர்த்தி [Mr. Seenivasan Krishnamurthy, Business Head, Smart Wearables, Titan Company Limited] அவர்கள் கூறியதாவது “இவோக் 2.0 மூலம், டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம் பிரீமியம் ஃபேஷனையும் தற்காலத்திய தொழில்நுட்பத்தையும் ஒருசேர சங்கமிக்கும் ஸ்மார்ட் வாட்ச்களை உருவாக்கும் தனது தொலைநோக்கு சிந்தனையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. நேர்த்தி (elegance) மற்றும் கைக்கடிகார தொழில்நுட்ப சார்ந்த அனுபவம் போன்றவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறையை அடித்தளமாகக் (lifestyle-focused) கொண்ட, நவீன தொழில்நுட்ப அம்சங்களை விரும்பும் (tech-enabled) வாடிக்கையாளர்களுக்காக இவோக் 2.0 பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எங்களின் ப்ரீமியம் ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பு வரிசையில், பல்வேறு பயன்பாடுகளுக்கான கைக்கடிகாரங்களின் (versatile) தயாரிப்பாக இருக்கும். உடலில் அணியக்கூடிய பயன்பாட்டு தொழில்நுட்பச் சாதனங்கள் (wearables) அன்றாட வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவரும் நிலையில், பயனுள்ள, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட (user-centered) அனுபவங்களை உருவாக்குவதில் டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உணர்த்தும் வகையில் இவோக் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
ரூ. 8499/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள டைட்டன் இவோக் 2.0, க்ளேசியர் ப்ளூ (Glaciar blue), டைடல் ப்ளூ (Tidal blue) மற்றும் கோகோ ப்ரவுன் (Cocoa brown) என மூன்று விதமான டூயல்-டோன் மெட்டல் ஸ்ட்ராப்களில் கிடைக்கிறது- இந்த ஸ்மார்ட் வாட்ச் தொகுப்பு இப்போது டைட்டன் வேர்ல்ட் (Titan World), ஃபாஸ்ட்ராக் (Fastrack), ஹீலியோஸ் (Helios) விற்பனை நிலையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீமியம் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. மேலும், www.titan.co.in என்ற இணையதளத்திலும் மற்றும் முன்னணி இ-காமர்ஸ்(e-commerce) தளங்களிலும் ஆன்லைனில் கிடைக்கிறது.
டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம் பற்றிய தகவல்கள்
டைட்டன் ஸ்மார்ட் வியரபிள்ஸ் (Titan Smart Wearables) பிரிவு, ஸ்மார்ட் வாட்ச் உலகில் முன்னோடியாகத் (pioneering force) திகழ்கிறது. இது தனிப்பட்ட ஸ்டைலை மறுவரையறை செய்யும் வகையில் நல்வாழ்வை (well-being) மேம்படுத்தக்கூடிய ஸ்மார்ட் சாதனங்களை வடிவமைப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டு முதல், டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் ஃபேஷன் ஆகியவற்றின் எல்லைகளைத் தொடர்ந்து விரிவுபடுத்தி, ஒரு முழுமையான வாழ்க்கை முறைக்கு புதிய தர நிர்ணயங்களை அமைத்து வருகிறது .நிபுணத்துவத்தை மையமாகக் கொண்ட (Centre of excellence), டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம், படைப்பாற்றல் மற்றும் செயல்பாடு ஆகிய இரண்டையும் ஒருசேர வழங்கும் வகையில் எளிமையான, நேர்த்தியான வடிவமைப்புகள் முதல் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் அழுத்தமான வடிவமைப்புகள் (bold, eye-catching ones) வரை நாம் அணியக்கூடிய பயன்பாட்டு சாதனங்களை உருவாக்கியுள்ளது., இந்த தொகுப்பில் ஒவ்வொருவரின் ரசனைக்கேற்பவும் ஸ்டைல்கள் இடம்பெற்றுள்ளன. உங்களின் தனிப்பட்ட ஸ்டைலையும் மற்றும் சிறந்த வெளிப்படுத்த உங்களுக்கு உதவுவதே இதன் முக்கிய நோக்கமாகும். டைட்டன் ஸ்மார்ட் நிறுவனம், தொழில்நுட்பத்தையும் ஸ்டைலையும் ஒருசேர வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்வதற்கு உதவும் வகையில் புதிய ஸ்மார்ட்வாட்ச்களை இந்நிறுவனம் வடிவமைத்து உருவாக்குகிறது.









கருத்துகள் இல்லை