டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நாகன் தாங்கல் ஏரியை புத்துயிர் பெறச் செய்து செழிப்பான சுற்றுச்சூழலுக்கு உதவும் சமூக மையமாகவும் மேம்படுத்தி இருக்கிறது !
டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நாகன் தாங்கல் ஏரியை புத்துயிர் பெறச் செய்து செழிப்பான சுற்றுச்சூழலுக்கு உதவும் நீர்வளமாகவும், மக்கள் நல்லுறவைப் பேணும் சமூக மையமாகவும் மேம்படுத்தி இருக்கிறது !
சென்னை, அக்டோபர் 23, 2025:- உலகளாவிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக முன்னணி வகிக்கும் டாடா கம்யூனிகேஷன்ஸ் [Tata Communications], பிச்சாண்டிகுளம் வனத்துடன் (Pitchandikulam Forest) இணைந்து, தமிழ்நாட்டின் பொத்தூர் போத்தூர் ஊராட்சியில் உள்ள உப்பரபாளையம் கிராமத்தின் நாகன் தாங்கல் ஏரியை தூர் வாரி சீரமைத்திருக்கிறது. இதன் மூலம் நீண்டகாலமாக பயனற்ற நிலையில் இருந்த நாகன் தாங்கள் ஏரி இப்பொழுது பல்லுயிர்களுக்கான ஒரு செழிப்பான சுற்றுச்சூழலையும், இப்பகுதியிலுள்ள மக்களுக்கு நீர்வள ஆதாரமாகவும் புத்துயிர் பெற்றுள்ளது.
© Tata Communications. All rights reserved. Actual photos of the site.
இந்த மாபெரும் தூர் வாரும் முயற்சியின் மூலம், நீர் வள பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் மக்களிடையே சமூக நல்லுறவில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது, இதை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கிராமப்புற, சுற்றுச்சூழல், நீர், விவசாயம், சமூக மேம்பாடு, காலநிலை மாற்றம் தொடர்புடைய பிரச்சினைகளை அறிவியல் மற்றும் சமூகக் கோணத்தில் ஆய்வு செய்யும், மையத்தின் [W-CReS (the Watershed Organisation Trust Centre for Resilience Studies)] மதிப்பீட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது. W-CReS (WOTR Centre for Resilience Studies) என்பது Watershed Organisation Trust -ன் (WOTR) ஒரு பிரதான ஆய்வு மற்றும் அறிவியல் மையம் ஆகும், இது அறிவியல், கொள்கை மற்றும் நடைமுறைகளை வகுப்பது ஆகியவற்றை, பல துறைகளுடன் ஒருங்கணைக்கும் (trans-disciplinary) ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
15.01 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைத் தட்பவெப்ப நிலைகள், நிலத்தடி நீர் மட்டங்கள், நீரோட்ட முறைகள், நீர் பிடிப்பு திறன், புவியியல் ஆய்வுகள், புவியியல் வரைப்படம், நீர்த் தரம் மற்றும் நீர்நிலைக் குழாயின் அம்சங்கள் ஆகியவற்றின் மீது ஒரு முழுமையான பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. டாடா கம்யூனிகேஷன்ஸின் நிதியுடன் நடத்தப்பட்ட WOTR- பகுப்பாய்வில், "ஒரு சிறப்பாகத் திட்டமிடப்பட்ட புத்துயிரூட்டும் முயற்சியில், நீர்ப்பிடிப்பு நீரியல் மற்றும் உள்ளூர் சமூகப் பங்களிப்புடன் இணையும் போது எதையும் சாதிக்க முடியும்" என்பதை எடுத்துக்காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது..
நாகன் தாங்கல் ஏரி, இதற்கு முன்பு ஏறக்குறைய 2,800 கிராமவாசிகளுக்கு முக்கியமான நீர் ஆதாரமாக பயன்பட்டு வந்தது. மேலும் பருவமழை காலங்களில் நீர் சென்று சேர்வதற்கும், நகர்ப்புறங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கும் ஒரு முக்கிய நீர்நிலையாகவும் இருந்தது. எனினும், பல ஆண்டுகாலமாக தூர் வாரப்படாமல் இருந்ததால், வண்டல் மண் படிந்ததோடு, மாசுபட்டதால் அதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 75% அளவிற்கு கடுமையாகக் குறைந்துப் போனது. இதனால் இந்த ஏரியை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் சீரழிந்ததுவிட்டன. ஒரு காலத்தில் செழித்து வளர்ந்த இயற்கை வளம், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் தேங்கி நிற்கும் நீர்நிலையாக மோசமடைந்தது.
இந்த நிலைமையில், டாடா கம்யூனிகேஷன்ஸின் 'ப்ராஜெக்ட் நன்னீர்' (தமிழில், 'நல்' என்றும் 'நீர்' என்றும் பொருள்படும்) எனும் மறுசீரமைப்புத் திட்டம், 2022-ல் ஏரியை மீட்டெடுக்கத் தொடங்கப்பட்டது. 'நன்னீர்' என்ற இத்திட்டத்தின் பெயர் நல்ல நீரைத் திரும்பக் கொண்டுவரும் நோக்கத்தை மிகச் சரியாகப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
15.01 ஏக்கர் பரப்புள்ள ஏரிக்கு சிறப்பான வகையில் திட்டமிடப்பட்ட நில வடிவமைப்பு உத்தி பின்பற்றப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நாகன் தாங்கல் ஏரியில் இப்போது மேடைகள், ஒரு தீவு, மற்றும் நடைபாதைகளுடன் கூடிய இரண்டு சிறிய குன்றுகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நிலத்தை வடிவமைக்கு கட்டத்தில், ஏரியின் 4 ஏக்கர் பரப்பளவிற்கு 1.5 மீட்டர் ஆழம் வரை கவனமாக தூர் வாரப்பட்டு வண்டல் நீக்கப்பட்டது. இங்கு தோண்டி எடுக்கப்பட்ட வண்டல் மற்றும் மண், பின்னர் குன்றுகள், தீவுகள் மற்றும் கரைகளை உருவாக்க பயன்படுத்தப்பட்டன. இது ஏரியின் சுற்றுச்சூழல் அமைப்பின் புத்துயிர் பெறுவதற்கு பங்களித்தது வண்டல் நீக்கப்பட்ட ஏரிப் பகுதியில் உள்ள கரைகள், மேடைகள், தீவு மற்றும் குன்றுகளில் 4,000-க்கும் மேற்பட்ட பூர்வீக இனத்தாவரங்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நடப்பட்டுள்ளன.
நாகன் தங்கால் ஏரியின் புத்துயிர்ப்பு பணி, ஏரியின் நீர் சேமிப்புத் திறன் மற்றும் வருடாந்திர நிலத்தடி நீர் மறுஊட்டம் ஆகியவற்றை கணிசமாக அதிகரித்துள்ளது என W-CReS அறிக்கை தெரிவித்திருக்கிறது. மேலும், இப்பணி தாவரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதன் மூலம் நிலப் பயன்பாட்டு முறைகளிலும் நேர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.
இந்த புத்துயிர்ப்புப் பணி, நிலத்தடி நீர் அளவைக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. மேலும், கால்நடைகளுக்கான குடிநீர் விநியோகத்தையும், அவ்வப்போது மீன் பிடிக்கும் வாய்ப்புகளையும், சமூக பொழுதுபோக்கு வசதியையும் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய 12,000 நபர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது, இவர்களில் 60% பேர் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள். நுண்ணுயிரியல் நீர்த் தரக் குறிக்காட்டிகளும் குறைந்த முதல் மிதமான மாசு அளவுகளைக் காட்டுகின்றன, இது தொடர்ச்சியான சமூக விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு முயற்சிகளின் தேவையை எடுத்துக்காட்டுகிறது.
புதுப்பிக்கப்பட்ட ஏரி, அருகிலுள்ள ஒரு டஜன் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அனுபவக் கல்வி வாய்ப்புகளையும் வழங்குகிறது. ஏரிக்கு அடுத்தாற்போல் கட்டப்பட்ட ஒரு கற்கும் மையம், இங்குள்ள சமூகத்தால் வழிநடத்தப்படும் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தொடர்பு மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இம்மையம் உள்ளூர் நிர்வாகத்தை ஊக்குவிப்பதோடு, குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு இயற்கை சார்ந்து கற்கும் செயல்பாடுகளை நடத்தி வருகிறது.
குறிப்பாக சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நகரமயமாக்கம் மிக வேகமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில், இந்த மேம்பாடுகளைப் பராமரிப்பதற்கு காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நீர் வள நிர்வாகம், தொடர் கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் தரவு-சார்ந்த உத்திகளின் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
அடுத்த கட்டமாக, இந்த திட்டத்தின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், டாடா கம்யூனிகேஷன்ஸ் உள்ளூரில் பல்லுயிரிகளுக்கான சூழலைத் தொடர்ந்து கண்காணிப்பதோடு சமூக ஈடுபாட்டுக்கான முயற்சிகளை வலுப்படுத்தும்.
W-CReS-ன் முக்கிய மதிப்பீடுகள்
நீர்வள பாதுகாப்பில் உண்டாகியிருக்கும் முன்னேற்றம் [Water Security Boost] நீர் சேமிப்பு:2.6 மில்லியன் லிட்டர்கள் [முன்பு] தற்போது புனரமைப்புத் திட்டத்திற்குப் பின்பு 8.5 மில்லியன் லிட்டர்கள்.
நிலத்தடி நீர் இத்திட்டத்திற்குப் பிறகு 8.5 மில்லியன் லிட்டராக 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.
நீர்
பிடிப்பு பரப்பளவில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் (2022-24) நீர் பரவியிருக்கும் இடத்தின் பரப்பளவு வெகுவாக அதிகரித்து இருக்கிறது.
• 3X பருவமழைக்கு முன்: 5.10 ஹெக்டேர்கள் → 15.19 ஹெக்டேர்கள்
• 1.5X பருவமழைக்கு பின்: 16.60 ஹெக்டேர்கள் → 24.95 ஹெக்டேர்கள்
- 3X நீர் பரவல் பரப்பளவு அதிகரிப்பு: 179.54 மிமீ → 508.93 மிமீ (pre and post monsoon runoff)
நிலத்தின் பயன்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது வறண்ட நிலம் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது: 236.11 ஹெக்டேர்கள் → 199.39 ஹெக்டேர்கள்
கட்டமைக்கப்பட்ட பகுதி- 86% ஆக அதிகரிகப்பட்டிருக்கிறது:13.11 ஹெக்டேர்கள் → 24.33 ஹெக்டேர்கள்
மீட்டெடுக்கப்பட்டிருக்கும்
பல்லுயிர்கள் - 14 மீன் வகைகள், 56 பறவையினங்கள், 33 வண்ணத்துப்பூச்சி வகைகள் இங்கு காணப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இங்கு காணப்படும் பறவைகள்
Black-crowned Night Heron, Whiskered Tern, Common Sandpiper
Monarch, Emigrant Yellow
இத்திட்டத்தைப் பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அனுபவக் கல்விக்கான பள்ளிக்கூட வருகை நிலவரம் வருடத்திற்கு 11,500+ பேர் இங்கு வருகை தருகிறார்கள்.
கல்வி தொடர்பாக இங்கு தோராயமாக 650 மாணவர்கள் 11 பள்ளிகளில் இருந்து வருகிறார்கள்
- சுற்றுச்சூழல் விழாக்களில் குறைந்தப்பட்சம் 1,100 பேர் பங்கேற்கிறார்கள்
ஆதாரம் - WOTR- மீள்தன்மை ஆய்வுகளுக்கான மையம் (W-CReS). (2025). நாகன் தாங்கல் ஏரியின் புவி-நீர்நிலை மதிப்பீடு: நிலத்தடி நீர் மறுசீரமைப்பு, நீர் தரம் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு குறித்த ஆய்வு. [*Source: WOTR- Centre for Resilience Studies (W-CReS). (2025). Geo-hydrological Assessment of Nagan Thangal Lake: A Study on Groundwater Recharge, Water Quality and Ecosystem Restoration.]
டாடா கம்யூனிகேஷன்ஸின் துணைத் தலைவர் (EOHS & சஸ்டெயினபிலிட்டி) திரு. முகுல் குமார் [Mukul Kumar, Vice President (EOHS & Sustainability), Tata Communications] ’ப்ராஜெக்ட் நன்னீர்’ குறித்து பேசுகையில், "டாடா கம்யூனிகேஷன்ஸில், மக்கள் மற்றும் பூமி இவையிரண்டின் நலனுக்கும், நல்வாழ்விற்கும் நாங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளோம். டாடா கம்யூனிகேஷன்ஸ் முன்முயற்சியான ’ப்ராஜெக்ட் நன்னீர்’ எங்களது இலக்கை நோக்கிய அடுத்தக்கட்டமாக அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் பராமரிப்பின்றி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்த ஏரி, இன்று செழிப்பான சுற்றுச்சூழலுக்கான ஆதாரமாக மாறி, வளமான பல்லுயிரியலை ஆதரிக்கும் நீர்நிலையாக, சமூகக் கற்றல் மற்றும் நல்லுறவிற்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது. W-CReS ஆய்வும் நாகன் தாங்கல் ஏரியின் மறுசீரமைப்பு முயற்சியும், நாடு முழுவதுமுள்ள ஏரிகள் இதேபோன்ற, நேர்மறை தாக்கமுள்ள மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் சமூகத்தில் இது போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம்." என்றார்.
டாடா கம்யூனிகேஷன்ஸின் 'ப்ராஜெக்ட் நன்னீர்' மற்றும் கற்றல் மையம் என்பது சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும், பல்லுயிரிகளுக்கு புத்துயிர் அளிக்கும், சமூகத்திற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் ஒரு நேரடி உதாரணமாக இருக்கிறது.. மேலும் இத்திட்டம் நீர்வளம், பசுமையான சூழல், பல்லுயிர்கள் மற்றும் மக்களை ஒன்றிணைத்து அனைவருக்கும் பொதுவான ஒரு நல்வாழ்வு தளத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரு பகிரப்பட்ட குணப்படுத்தும் இடத்திற்கு கொண்டு வருகிறது. இது வெறும் தோட்டம் மட்டுமல்ல - குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் குழுக்கள் கற்றுக்கொள்ளவும், உள்ளூர் சமூகங்கள் முன்னேற்ற காணவும், இயற்கை மீண்டும் வந்து ஒரு திட்டமிடல் மையமாக செயல்படவும் ஒரு மையமாக உருப்பெற்றிருக்கிறது. பசுமையான, பல்லுயிர்கள் அதிகமுள்ள விழிப்புணர்வு கொண்ட எதிர்கால தமிழ்நாட்டை நினைவுக்கூறச் செய்யும் முயற்சியாகும்.’’ என்றார். பிச்சாண்டிகுளம் வனத்தின் நிறுவனர் ஜாஸ் ப்ரூக்ஸ் [Joss Brooks, Founder, Pitchandikulam Forest]
W-CReS--ன் இயக்குநர், டாக்டர் மார்செல்லா டி'சூசா [Dr. Marcella D’Souza, Director, W-CReS.] கூறுகையில் "உலகளாவிய வாதம் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பது மற்றும் இயற்கை-அடிப்படையிலான தீர்வுகளை மையப்படுத்துவது போன்றவற்றுக்கு ஆதரவாக எழும் இந்த நேரத்தில், டாடா கம்யூனிகேஷன்ஸின் 'ப்ராஜெக்ட் நன்னீர்' போன்ற முன்முயற்சிகள், தெளிவான, அளவிடக்கூடிய நன்மைகளை வழங்கும் சக்திவாய்ந்த உதாரணங்களாக தனித்து நிற்கின்றன. இந்த முன்முயற்சியை உண்மையில் சக்திவாய்ந்ததாக ஆக்குவது, நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை சிந்தனை மிக்க, நம்பகமான சான்றுகளுடன் வெளிப்படுத்துவதே ஆகும். வலுவான மதிப்பீடுகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை நம்பிக்கையை உருவாக்குவதற்கும் அர்த்தமுள்ள மாற்றத்தை விரிவுபடுத்துவதற்கும் மிகப் பெரிய கருவிகளாக இருக்கின்றன." என்றார்
சமூகத்தின் குரல்கள்:
"நாகன் தாங்கல் ஏரி புனரமைப்பு மாதிரி திட்டம், நீர் பற்றாக்குறை சவால்களை அடிக்கடி எதிர்கொள்ளும் நமது தமிழ்நாட்டில் நீர் ஆதார பாதுகாப்பு முயற்சிகளுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது,. ஒரு ஏரியை மறுசீரமைப்பதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்துவது மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பதை நிரூபிப்பதன் மூலம், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிலையான நீர் மேலாண்மைக்கு ஒரு முன்னுதாரணத்தை அமைத்து வருகிறது," என்று பொத்தூர் ஊராட்சித் தலைவர் பி.வி. சுரேஷ் கூறினார்.
"அனுபவக் கல்வியைப் பயில உதவும் பள்ளிக்கூட சுற்றுலாக்கள் மற்றும் இயற்கை சூழ்ந்த பகுதியில் உலா வருவதற்கு டாடா கம்யூனிகேஷன்ஸின் 'ப்ராஜெக்ட் நன்னீர்' ஏரி புனரமைப்புத் திட்டமும், கற்றல் மையமும் மிகவும் பிரபலமான இடங்களாக மாறியுள்ளன, இது குழந்தைகளுக்கும் அவர்களின் இயற்கைச் சூழலுக்கும் இடையே ஆழமான தொடர்பை ஏற்படுத்துகிறது, பல்லுயிர் பெருக்கத்தை நேரடியாக வெளிப்படுத்துவது சுற்றுச்சூழல் பராமரிப்பில் ஈடுபாடு கொள்ளும் அடுத்த தலைமுறையினரை ஊக்குவிப்பதில் முக்கியமானதாக இருக்கும்." என்று கூறிய திருவள்ளூர் மாவட்டம் ஐயப்பாக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியை, திருமதி மீனா கூறினார். "
"நாகன் தாங்கல் ஒரு குப்பைக் கிடங்கிலிருந்து ஒரு உயிருள்ள ஏரியாக மாறியது தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது இங்கு பல்வேறு வகையான பறவைகளைப் பார்த்தோம் அவை இன்று திரும்பி வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று உப்பரபாளையம் கிராம பொதுப்பணித்துறை ஒருங்கிணைப்பாளரும், உப்பரபாளையம் கிராமவாசியுமான துளசி கூறினார்.









கருத்துகள் இல்லை