சற்று முன்



கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு பிரம்மாண்டபுதிய விற்பனை நிலையங்களைபிரபு மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சென்னையில் துவங்கி வைத்தனர் !



கல்யாண் ஜூவல்லர்ஸின் இரண்டு பிரம்மாண்ட புதிய விற்பனை நிலையங்களை திரைப்பட நட்சத்திரங்கள் பிரபு மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சென்னையில் துவங்கி வைத்தனர் ! 

சென்னை, டிசம்பர் 7, 2025: இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ், இன்று சென்னையில் ஈ.சி.ஆர் (ECR) மற்றும் ரெட் ஹில்ஸ் (Red Hills) ஆகிய இரண்டு இடங்களில் தனது புதிய விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளது. பிரபல திரைப்பட நட்சத்திரங்களான பிரபு கணேசன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந்த புதிய கிளைகளைத் திறந்து வைத்தனர். சென்னைப் பகுதியில் கல்யாண் ஜூவல்லர்ஸ் தனது வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த புதிய கிளைகளைத் தொடங்கியிருக்கிறது.


இந்த விற்பனை நிலையங்களில் கல்யாண் ஜுவல்லர்ஸின் மிக பிரபலமான பிராண்ட்களான முகூரத் (திருமண நகை வரிசை) Muhurat (Wedding Jewellery Line), முத்ரா (கையால் செய்யப்பட்ட பழங்கால பாணியிலான நகைகள்) Mudhra (Handcrafted Antique Jewellery),, நிமாஹ் (கோயில் நகைகள்) (Nimah (Temple Jewellery), உள்ளிட்ட எண்ணற்ற பிரத்தியேக வடிவமைப்புகளிலான நகைகள் வாடிக்கையாளர்களின் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.  உலகத்தரம் வாய்ந்த ஆடம்பரமான சூழலில், மேம்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த விற்பனை நிலையங்களில், கல்யாண் ஜுவல்லர்ஸின் பல்வேறு பிராண்ட்களின் நகை வடிவமைப்புகள் இடம்பெற்றிருப்பதால், இப்பகுதி மக்களுக்கு ஒரு மிகச்சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய விற்பனை நிலையங்களில் தொடக்க விழாவில் பேசிய நடிகர் பிரபு மற்றும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர், "கல்யாண் ஜூவல்லர்ஸின் இந்த புதிய கிளை திறப்பு விழாவில் பங்கேற்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நலனை எப்போதும் முதன்மையாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தோடு இணைந்திருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கல்யாண் ஜூவல்லர்ஸின் உலகத்தரம் வாய்ந்த சேவை மற்றும் அற்புதமான நகை தொகுப்புகளைப் பாராட்டும் வகையில் சென்னை மக்கள் தங்களுடைய அன்பையும் ஆதரவையும் நிச்சயம் அளிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்," என்று தெரிவித்தனர்.


இது குறித்து கல்யாண் ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ரமேஷ் கல்யாணராமன் [Mr Ramesh Kalyanaraman, Executive Director, Kalyan Jewellers] பேசுகையில், "சென்னையில் திறக்கப்பட்டுள்ள எங்களது இந்த இரண்டு புதிய கிளைகள் மூலம், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப ஒரு முழுமையான ஷாப்பிங் தளத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம். நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை எனும் எங்களின் நிலையான கொள்கைகளிலிருந்து மாறாமல், உலகத்தரம் வாய்ந்த சிறப்பான சூழலையும், வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சேவையையும் மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்றார்.


புதிய விற்பனை நிலையங்களின் தொடக்கத்தை குறிக்கும் விதமாக, கல்யாண் ஜூவல்லர்ஸ் பலவிதமான பிரத்தியேகமான விற்பனை நிலைய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட்ட நகைகள்: செய்கூலியில் (Value addition) கிராமுக்கு ரூ. 750 தள்ளுபடி.


ப்ரீமியம் & கற்கள் பதித்த நகைகள்: செய்கூலியில் கிராமுக்கு ரூ. 1500 தள்ளுபடி.


கோவில் ஆபரணங்கள் & ஆன்டிக் நகைகள்: செய்கூலியில் கிராமுக்கு ரூ. 1000 தள்ளுபடி.


•சந்தையில் மிகவும் குறைவாக உள்ள, அனைத்து விற்பனை நிலையங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும், கல்யாணின் சிறப்பு தங்க விலை (Kalyan’s Special Gold Board Rate) போன்ற பலன்களும் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனை நிலைய அறிமுக சலுகைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.


கல்யாண் ஜூவல்லர்ஸ்ஸில் விற்பனைக்கு உள்ள ஒவ்வொரு நகையும் BIS ஹால்மார்க் தர முத்திரை உள்ளதுடன், அவற்றின் உயர் தரத்தை உறுதி செய்யும் பல தூய்மைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு கல்யாண் பிராண்டின் தனிச்சிறப்பான 4-நிலை உத்திரவாத சான்றிதழ் (4-Level Assurance Certificate) வழங்கப்படும். இது தங்கத்தின் தூய்மை, வாழ்நாள் முழுவதும் இலவச பராமரிப்பு, அந்த நகைக் குறித்த விரிவான தகவல் மற்றும் வெளிப்படையான தங்கப் பரிமாற்ற திட்டம் மற்றும் நகைகளை திரும்ப வாங்கும் கொள்கைகள் ஆகியவற்றை உறுதி செய்கிறது.இந்த உறுதிமொழி, கல்யாண் ஜூவல்லர்ஸ், தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தரம் மற்றும் பெரும் நம்பிக்கையை வழங்க வேண்டுமென்பதில் கொண்டிருக்கும் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் காட்டுகிறது

இந்த புதிய விற்பன நிலையங்களில் கல்யாணின் பிரபலமான உள்நாட்டு பிராண்ட்களான முகூரத் (திருமண நகை வரிசை) Muhurat (Wedding Jewellery Line), முத்ரா (கையால் செய்யப்பட்ட பழங்கால பாணியிலான நகைகள்) Mudhra (Handcrafted Antique Jewellery),, நிமாஹ் (கோயில் நகைகள்)  (Nimah (Temple Jewellery),  க்ளோ {ஜொலிப்புடன் அசைந்தாடும் வைர நகைகள்) (Glo (Dancing Diamonds), ஸியா (தனி வைரங்களிலான சாலிடேர் போன்ற நகைகள்) (Ziah (Solitaire-like Diamond Jewellery), அனோகி (வெட்டப்படாத வைரங்கள்) (Anokhi (Uncut Diamonds), அபூர்வா (சிறப்பான சந்தர்ப்பங்களுக்கான வைரங்கள்) (Apoorva (Diamonds for Special Occasions), அன்டாரா (திருமண வைரங்கள்) (Antara (Wedding Diamonds),  ஹேரா (தினசரி அணியும் வைரங்கள்) (Hera (Daily Wear Diamonds),, ரங் (விலைமதிப்பற்ற கற்கள் நகைகள்) (Rang (Precious Stones Jewellery),, மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லீலா (வண்ணக் கற்கள் மற்றும் வைர நகைகள்) (Lila (Coloured Stones and Diamond Jewellery). ஆகியவையும் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கல்யாண் ஜூவல்லர்ஸ் ப்ராண்ட், அதன் நகைத் தொகுப்புகள்  மற்றும் சலுகைகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, https://www.kalyanjewellers.net/ ஐப் பார்வையிடவும்.

 

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்* [T&C Apply*]


கல்யாண் ஜூவல்லர்ஸ் குறித்து :


கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை தனது வலுவான செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியாவின் மிகப் பெரிய சில்லறை நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வர்த்தகத்தை நீடித்து நிலைக்கச் செய்து முக்கியத்துவம் பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. மேலும் ஆபரண சந்தையில் உயரிய தரம், வெளிப்படைத்தன்மை, புதுமை, விலை நிர்ணயம் ஆகியவற்றிக்கு ஒரு புதிய வரையறை உருவாக்கி இருக்கிறது.  தனது அடையாளங்களாக கொண்டு விளங்கி வருகிறது. தங்கம், வைரம், விலையுயர்ந்த கற்கள் ஆகியவற்றை கொண்டு பாரம்பரியமும் நவீனத்தன்மையும் கொண்ட வேலைப்பாடுகளுடன் நகைகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள்,  ஐக்கிய அமீரகம், குவைத், கத்தார், ஓமன், அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் என பரவலாக  400-க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்  விற்பனை  நிலைய பரப்பளவு 9,08,000 சதுர அடிக்கும் மேல் இருப்பது இதன் வெற்றிகரமான விற்பனை செயல்பாடுகளையும், வாடிக்கையர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது.


கருத்துகள் இல்லை