ZEE5 இன் அடுத்த அதிரடி ஆக்சன் காமெடி திரைப்படம் “தி பெட் டிடெக்டிவ்”, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது!!
நவம்பர் 26 செய்திகள் !
ZEE5 இன் அடுத்த அதிரடி ஆக்சன் காமெடி திரைப்படம் “தி பெட் டிடெக்டிவ்”, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது!!
ரசிர்கர்களின் ஆர்வத்தைத் தூண்டியிருக்கும் அதிரடி ஆக்சனுடன் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமான “தி பெட் டிடெக்டிவ்” ( The Pet Detective ) நவம்பர் 28 முதல் ZEE5-ல் வெளியாகிறது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமாகும் இந்த படத்தை, இயக்குநர் பிரனீஷ் விஜயன் இயக்கியுள்ளார்.
நடிகர் ஷரஃப் U தீன் முதல்முறையாக நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அவரே தயாரித்துள்ளார். இப்படத்தில் விநாயகன், வினய் போர்ட், அனுபமா பரமேஸ்வரன், ஷ்யாம் மோகன், ஜோமோன் ஜியோதிர் உள்ளிட்ட பல திறமை மிகு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
டோனி ஜோஸ் அலுலா (ஷரஃப் U தீன்) ஒரு இயல்பான குறைபாடுகள் கொண்ட சாதாரணமான இளைஞன் என்றாலும் அவன் ஒரு உறுதியான தனியார் டிடக்டிவ். தனது திறமையை நிரூபிக்க ஒரு எளிய ‘மிஸ்சிங் பெட்’ கேஸை விசாரிக்க ஆரம்பிக்கிறான். ஆனால், அது விரைவில் சர்வதேச கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், காணாமல் போன குழந்தை, மெக்ஸிகன் மாஃபியா டான், அரிய வகை மீன்கள், அவன் விரும்பும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் என பல சிக்கல்களுக்கும், கலகலப்பான சூழல்களுக்கும் இழுத்துச் செல்கிறது.
இயக்குநர் பிரியதர்ஷன் ஸ்டைலின் கிளாசிக் காமெடி கிளைமாக்ஸை நினைவூட்டும் வகையில், நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள், அட்டகாசமான சம்பவங்கள் என குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய அசத்தலான எண்டர்டெயின்மெண்ட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தை தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள ஷரஃப் U தீன் கூறியதாவது:
“ “தி பெட் டிடெக்டிவ்” ( The Pet Detective ) என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படைப்பு. நான் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் என்பதால் அல்ல, பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டு ரசிக்கக்கூடிய ஒரு கலர்ஃபுல், கோலாகலமான படத்தை உருவாக்கவேண்டும் என நினைத்தோம். எந்த ஓவர்திங்கிங்கும் இல்லாமல் குடும்பம் முழுவதும் ரிலாக்ஸ் ஆக பார்க்கக்கூடிய படம் இது. மலையாளத்துடன், இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இதைப் பார்க்கலாம் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.”
“தி பெட் டிடெக்டிவ்” ( The Pet Detective ) திரைப்படத்தை நவம்பர் 28 முதல் ZEE5-ல் பார்த்து ரசிக்கலாம்.








கருத்துகள் இல்லை