ராஜா சாப்’ திரை விமர்சனம் ! Review
பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தாத்தாவை தேடி செல்லும் பிரபாஸ், அவர் சக்திவாய்ந்த மந்திரவாதி என்பதை அறிந்து கொள்ளும் தருணத்திலிருந்து படம் திகில்–ஃபேண்டஸி உலகிற்குள் பயணிக்கிறது. தாத்தா–பேரன் மோதலை மையமாக வைத்து, கமர்ஷியல் அம்சங்களுடன் கதை நகர்கிறது.
பிரபாஸ் தனது வழக்கமான ஸ்டைலுடன் எளிதாக கதையை தாங்கிச் செல்கிறார். சஞ்சய் தத் மந்திரவாதி தாத்தா வேடத்தில் கம்பீரமான திரை இருப்பை வழங்குகிறார். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் மூவரும் படத்திற்கு கவர்ச்சியும் கலர்புல்லான தோற்றத்தையும் சேர்க்கிறார்கள்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். பேய் மாளிகை காட்சிகள் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. தமன்.எஸ் இசையில் பாடல்கள் கமர்ஷியல் ரீதியில் ரசிக்கும்படி உள்ளன; பின்னணி இசை படத்திற்கு வேகம் சேர்க்கிறது.
திகில், ஃபேண்டஸி, காதல், காமெடி என அனைத்து மசாலா அம்சங்களையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, ‘ராஜா சாப்’ ஒரு கலர்புல்லான எண்டர்டெயினராக அமைந்துள்ளது.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை