காந்தி டாக்ஸ் திரை விமர்சனம் ! Review
மும்பை குடிசைப் பகுதியில் வாழும் ஏழை மனிதன் மற்றும் அனைத்தையும் இழந்த பணக்கார தொழிலதிபர் ஆகிய இரு வாழ்க்கைகள் சந்திக்கும் போது, “பணம் மனிதனை எப்படி பேச வைக்கிறது?” என்ற கேள்வியை தைரியமாக முன்வைக்கும் ஒரு சமூக கருத்து திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது.
விஜய் சேதுபதி வறுமையின் வேதனையை முகபாவனைகளும் உடல் அசைவுகளும் மூலம் மிக இயல்பாக வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். அரவிந்த் சாமி பணக்காரனில் இருந்து வீழ்ந்த தொழிலதிபர் கதாபாத்திரத்தில் கண்களாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அதிதி ராவ் உணர்வுப்பூர்வ காட்சிகளில் மனதைத் தொடுகிறார்; சித்தார்த் ஜாதவ் நகைச்சுவையுடனும் சிந்தனையுடனும் படத்திற்கு வலு சேர்க்கிறார்.
கரண் பி.ராவத்தின் ஒளிப்பதிவு, மும்பையின் பணக்கார–ஏழை வேறுபாடுகளை வலுவாக காட்டுகிறது. வசனம் இல்லாமல், ஏ.ஆர். ரஹ்மானின் இசை மூலமே உணர்வுகளை பேச வைத்திருப்பது படத்தின் மிகப் பெரிய பலம். இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலகர், லஞ்சம், ஊழல், நீதித்துறை சீரழிவு போன்ற சமூக பிரச்சனைகளை துணிச்சலாக எடுத்துச் சொல்லி, “பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை” என்ற காந்தியின் தத்துவத்தையும் அழகாக பதிவு செய்துள்ளார்.
திரைக்கதை மெதுவாக நகர்வது சிறு குறையாக இருந்தாலும், வசனம் இல்லாத ஒரு கருத்து திரைப்படமாக, நடிகர்களின் நடிப்பும், இசையும், காட்சியமைப்பும் இணைந்து காந்தி டாக்ஸ் ஒரு சிந்திக்க வைக்கும், வித்தியாசமான சமூகக் கலைப் படமாக திகழ்கிறது.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை