கருப்பு பல்சர் திரை விமர்சனம் ! Review
ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் சந்திக்கும் தினேஷ் – ரேஷ்மா வெங்கடேஷ் காதல் கதையை, கருப்பு பல்சர் பைக்குடன் இணைந்த அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் ஜல்லிக்கட்டு அரசியல் பின்னணியுடன் இணைத்து சொல்லும் புதுமையான முயற்சி இது.
தினேஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சுவாரசியமாக இருந்தாலும், தோற்ற மாற்றம் குறைவாக இருந்தது சிறிய குறை. இருந்தாலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். ரேஷ்மா வெங்கடேஷ் பாடல் காட்சிகளில் அழகாக காட்சியளிக்கிறார். அர்ஜய், மன்சூர் அலிகான், சரவண சுப்பையா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
பாஸ்கர் ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு, குறிப்பாக ஜல்லிக்கட்டு காட்சிகள், உண்மைத் தன்மையுடன் ரசிக்க வைக்கிறது. இன்பாவின் இசை மற்றும் பின்னணி இசை கதைக்கேற்ற வகையில் அமைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு, சாதி அரசியல், திகில், காதல், காமெடி ஆகியவற்றை கமர்ஷியல் பாணியில் இணைத்து, கருத்துடன் சொல்லியிருப்பது இயக்குநர் முரளி கிரிஷ். எஸ்ஸின் சிறப்பு. குறைந்த பட்ஜெட்டில் கூட அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ரசிக்கத்தக்க மாஸ்–கண்டென்ட் படமாக இது உருவாகியுள்ளது.
Rating : 3 / 5







கருத்துகள் இல்லை