சற்று முன்



ஏசிஜி ஜூனியர் என்பிஏ 3வி3 தேசியப் போட்டியின் சென்னை சுற்றுப் போட்டி !



ஏசிஜி ஜூனியர் என்பிஏ 3வி3 தேசியப் போட்டியின் சென்னை சுற்றுப் போட்டியில், பொன்னேரி வேலம்மாள் இன்டர்நேஷனல் ஸ்கூல் (டிவிஐஎஸ்), பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா அணிகள் வெற்றி வாகை சூடின

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஏசிஜி ஜூனியர் என்பிஏ 3வி3 தேசிய இறுதிப் போட்டிக்கு மூன்று சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் தகுதி பெற்றுள்ளன


14 வயதிற்குட்பட்ட (யு-14) சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகளுக்கான நாடு தழுவிய பள்ளிகளுக்கு இடையிலான ஏசிஜி ஜூனியர் என்பிஏ 3வி3 தேசியத் தொடரின் சென்னை சுற்றுப் போட்டிகள் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தன.

ஒவ்வொரு மண்டலத்திலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் மற்றும் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் தலா ஒரு 'ஆல்-ஸ்டார்' சிறுவர் மற்றும் சிறுமியர் அணிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஏசிஜி ஜூனியர் என்பிஏ 3வி3 தேசிய இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

சென்னை சுற்றுப் போட்டிகள் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயாவைச் சேர்ந்த ஆஷிகா (யு14 சிறுமியர்) மற்றும் பொன்னேரி தி வேலம்மாள் இன்டர்நேஷனல் ஸ்கூல் (டிவிஐஎஸ்) சேர்ந்த அர்வாஸ் கான் (யு14 சிறுவர்) ஆகியோருக்கு ஸ்கெச்சர்ஸ் எம்விபி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் 12-வது நிகழ்வு, இந்தியக் கூடைப்பந்து கூட்டமைப்புடன் (பிஎஃப்ஐ) இணைந்து நடத்தப்படுகிறது. இதில் ஸ்கெச்சர்ஸ் அதிகாரப்பூர்வ கிட் பார்ட்னராக உள்ளது.

ஏசிஜி ஜூனியர் என்பிஏ 3வி3 தேசியத் தொடரின் சென்னைச் சுற்று வெற்றியாளர்களின் விவரம் பின்வருமாறு:

யு-14 சிறுவர்கள்

வகை வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்ற அணி

வெற்றியாளர்கள் 1. ரோஹன் நிதிஷ்

2. ஸ்ரீகாந்த்

3. அர்வாஸ் கான்

4. மணிகண்டன் வேலம்மாள் இன்டர்நேஷனல் ஸ்கூல், பொன்னேரி

இரண்டாம் இடம் 1. யோகேஷ் N

2. முகமது ஆதில் A

3. சரவணன் M

4. ஜோன்ஸ் கேமரூன் P கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

ஆல்-ஸ்டார் அணி சென்னை 1. A சந்தோஷ் - அமெரிக்கன் கல்லூரி

2. A ஜோயல் அந்தோனி - அமெரிக்கன் கல்லூரி

3. M சீனிவாசன் - அமெரிக்கன் கல்லூரி

4. விதுன் கௌசிக் Y - வேலம்மாள் வித்யாலயா, ஆலப்பாக்கம்

யு-14 சிறுமியர்

வகை வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்ற அணி

வெற்றியாளர்கள் 1. நவ்யா

2. கிரியா

3. தர்ஷினி

4. ஆஷிகா வேலம்மாள் வித்தியாலயா, பருத்திப்பட்டு

இரண்டாம் இடம் 1. M N அஃப்ரீன் ரூஹி

2. G ஜோஷ்னா

3. A காயத்திரி

4. V அன்ஷிகா செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

ஆல்-ஸ்டார் அணி சென்னை 1. R ரெயோனா - செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

2. S லக்ஷனாபி - செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

3. ஆத்யா விஜய் - ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி

4. அர்ச்சனா பிரியா - டிஏவி சீனியர் செகண்டரி பள்ளி, முகப்பேர்

ஏசிஜி ஜூனியர் என்பிஏ திட்டம், இந்திய இளைஞர்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கூடைப்பந்து ஆட்டத்தின் அடிப்படைகளையும் விழுமியங்களையும் தொடர்ந்து கற்பித்து வருகிறது. 2013-இல் இந்தியாவில் தொடங்கப்பட்டதில் இருந்து, ஜூனியர் என்பிஏ திட்டம் நாடு முழுவதும் 35 நகரங்களில் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களையும் 15,000 உடற்கல்வி பயிற்றுநர்களையும் சென்றடைந்துள்ளது. ஏசிஜி ஜூனியர் என்பிஏ திட்டம் என்பது இந்தியாவில் என்பிஏ-இன் பரந்த அடித்தள அளவிலான கூடைப்பந்து மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதில் என்பிஏ கூடைப்பந்து பள்ளி திட்டமும் அடங்கும். இது இந்தியா ஆன் டிராக் நிறுவனத்தால் இயக்கப்படும், 6 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களுக்கான 13 நகரங்களில் உள்ள கட்டண அடிப்படையிலான கூடைப்பந்து மேம்பாட்டுத் திட்டங்களின் ஒரு வலையமைப்பாகும்.

விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், குடும்பத்தினர் ஆகியோர் 2025-26 ஏசிஜி ஜூனியர் என்பிஏ திட்டம் பற்றி மேலும் அறிந்துகொள்ள, ஃபேஸ்புக் (Facebook.com/NBAIndia), இன்ஸ்டாகிராம் @NBAIndia), யூடியூப் (YouTube.com/@NBAIndiaOfficial) மற்றும் எக்ஸ் (@NBAIndia) ஆகிய சமூக ஊடகங்களில் உள்ள என்பிஏ-யின் இந்தியப் பக்கங்களைப் பின்தொடரலாம்.

###


கருத்துகள் இல்லை