போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம் !
போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் காதல் படம் !
*Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில் உருவாகும் புரொடக்ஷன் நம்பர் 1
*மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி நடிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 1. இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஆ.வெங்கடேஷ், அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைகளம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ்.
இப்படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குனரும், நடிகருமான ஆ.வெங்கடேஷ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். அருவி மதன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். [டாக்டர் படத்தில் நடித்த] ஸ்ரீஜா ரவி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் [டைரி, குற்றம் 23-ல் நடித்த] தணிகை, மற்றும் பல புதிய முகங்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு [05-02-26] அன்று சென்னையில் ஆரம்பமானது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் படமாக்கப்பட்ட உள்ளது.
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிக்கும் இப்படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.










கருத்துகள் இல்லை