சற்று முன்



தெரிஞ்சா காதலிங்க திரை விமர்சனம் ! Review


தமிழ் சினிமா உலகில் அறிமுக நாயகர்கள் கிரண் , விபின் , சாதுல் பிரன் நடித்திருக்கும் படம் தெரிஞ்சா காதலிங்க

 மற்றும் நடிகை  அஜன்யா மற்றும் ஆதிரா , தீபா ஆண்டனி , மீசை வெள்ளைப்பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்..

இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கஜேந்திரன் ..


இளம் தலைமுறையின் காதல், நட்பு, வாழ்க்கை தேர்வுகளை மையமாக கொண்டு உருவான ஒரு  ரொமான்டிக் டிராமா திரைப்படம் தான் “தெரிஞ்சா காதலிங்க”.

 புதுமுக நடிகர்களின் கிரண் , விபின் , சாதுல் பிரன் இயல்பான நடிப்பும், உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.

அஜன்யா நன்றாக நடித்துள்ளார் கிராமத்து பெண்ணாக கதாபாத்திரத்துக்கு ஏற்ப பொருந்தியுள்ளார். 

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் மகேந்திரா. 

இசை மற்றும் பின்னணி இசை கதையின் உணர்வுகளை அழகாக எடுத்துச் சொல்லுகிறது. 

படத்தில் தென் மாவட்டத்தை சுற்றி தேனி  போன்ற  பகுதிகளில் காட்சிகள்  இயற்கையான காட்சிகள் மிக நன்றாக உள்ளது... 

திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், காதல் உணர்வுகளை உண்மையுடன் காட்டியிருப்பது பாராட்டத்தக்கது. சில இடங்களில் கதை வழக்கமான பாதையில் சென்றாலும், இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் படம் அமைந்துள்ளது.

மொத்தத்தில், “தெரிஞ்சா காதலிங்க” ஒரு சாதாரண ஆனால் மனதை நெகிழ வைக்கும் காதல் திரைப்படமாக பார்க்கலாம்.

Rating : 3 /


Marveltamilnews.com



கருத்துகள் இல்லை