ஸ்வீட்டி நாட்டி கிரேசி திரை விமர்சனம் ! Review
கல்லூரி காதலாக தொடங்கி, அதிர்ச்சி கலந்த குடும்ப பின்னணியில் நகரும் அடல்ட் காமெடி தான் ஸ்வீட்டி நாட்டி கிரேசி.
த்ரிகுண் – ஸ்ரீ ஜீத்தா கோஷ் இணையும் இளம் காதல், நாயகன் தனது கடந்தகால உறவுகளை வெளிப்படுத்தும் தருணத்தில் எதிர்பாராத திருப்பம் பெறுகிறது. அதற்குப் பிறகு கதைக்களம் முழுக்க காமெடி மற்றும் கவர்ச்சி கலந்த குழப்பங்களால் நிரம்பி நகர்கிறது.
நாயகனாக த்ரிகுண் இப்படிப்பட்ட துணிச்சலான கதையில் நடித்திருப்பது கவனிக்கத்தக்கது. சிக்கலான சூழலில் சிக்கிக்கொள்ளும் இளைஞனின் குழப்பத்தையும், காமெடி டைமிங்கையும் சமநிலையுடன் வெளிப்படுத்துகிறார்.
நாயகியாக ஸ்ரீ ஜீத்தா கோஷ், காதலிலும், கணவனாக மாற்றும் முடிவிலும் தன்னம்பிக்கையுடன் நடித்து கவர்கிறார்.
இனியா மற்றும் ராதா ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்திற்கு அதிக கவர்ச்சி அம்சத்தை சேர்க்கின்றன. குறிப்பாக குடும்ப பின்னணியில் உருவாகும் சிக்கல்கள், அடல்ட் காமெடிக்கு தேவையான சூழ்நிலைகளை உருவாக்குகின்றன.
தம்பி ராமையா, சத்யன், ஆலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், கதையின் மையம் கவர்ச்சிக்கும் இரட்டை அர்த்த வசனங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அவர்களின் காமெடி ஓரளவு பின்னணியில் தள்ளப்படுகிறது.
ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளும் பளிச்சென்று காட்டப்பட்டுள்ளனர். இசை மற்றும் பின்னணி இசை காட்சிகளின் மனநிலைக்கு ஏற்ப அமைந்துள்ளது. எடிட்டிங் வேகமாக நகர்கிறது.
இயக்குநர் ராஜசேகர்.ஜி, அடல்ட் காமெடி என்ற வரம்புக்குள் காமமும் காமெடியும் கலந்த திரைக்கதையை அமைத்துள்ளார். சில இடங்களில் எல்லையை நெருங்கும் காட்சிகள் இருந்தாலும், அதை முழுக்க வணிக நோக்கில் இளைஞர்களை இலக்கு வைத்து வடிவமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் :
ஸ்வீட்டி நாட்டி கிரேசி – அதிர்ச்சி கலந்த அடல்ட் காமெடி. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படம் அல்ல. ஆனால் இளம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வணிக அம்சங்கள் நிறைந்த ஒரு லைட் எண்டர்டெய்னர்.
Rating : 3.5 / 5








கருத்துகள் இல்லை